Insurance Scheme : 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசு அதிரடி! - Tamil News | People who are above 70 can get free medical insurance know how to apply in Tamil | TV9 Tamil

Insurance Scheme : 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசு அதிரடி!

Updated On: 

16 Sep 2024 16:22 PM

Senior Citizen | மத்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் ஆயுஷ்மான் பார்த் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா என்ற திட்டம் தான் தற்போது விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் சுமார் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

Insurance Scheme : 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசு அதிரடி!

மாதிரி புகைப்படம்

Follow Us On

இலவச மருத்துவ காப்பீடு திட்டம் : இந்தியாவில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் பயனடையளாமா, இந்த இலவச மருத்து காப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : New UPI Rules : யுபிஐ செயலிகள் மூலம் பணம் அனுப்புவதற்கான வரம்பு உய்ரவு.. அமலுக்கு வந்த புதிய விதிகள்.. முழு விவரம் இதோ!

மருத்துவ காப்பீடுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை

இந்தியாவில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் இந்திய குடிமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடம் உள்ளது. அதாவது அனைத்து தரப்பினருக்கு காப்பீடு வழங்கப்படுமா, வருமான வரம்பு உள்ளதா என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

இதையும் படிங்க : Amazon Great Indian Festival : அசத்தல் தள்ளுபடிகளுடன் வரப்போகும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. எப்போது தெரியுமா?

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவர்

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள மூத்த குடிமக்களுக்கான இந்த காப்பீடு திட்டத்தில் வருமான வரி வரம்பு இன்றி அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுகிறது. இந்தியாவில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது சராசரியாக 4.5 கோடி குடும்பங்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என்ற வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

காப்பீடு திட்டத்திற்கான புதிய அட்டை வழங்கப்படும்

மத்திய அரசு வழங்கவுள்ள இந்த இலவச மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு தகுதியான மூத்த குடிமக்கள் அனைவருக்கும் புதிய அட்டை ஒன்றும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்!

மத்திய அரசின் புதிய திட்டத்தின் சிறப்பு என்ன

மத்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் ஆயுஷ்மான் பார்த் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா என்ற திட்டம் தான் தற்போது விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் சுமார் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுஷ்மான் பார்த் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ATM Card : பணம் எடுக்க ஏடிஎம் கார்டு எடுத்து செல்லவில்லையா?.. கவலை வேண்டாம்.. அதான் UPI இருக்கே!

முதுமை கால பாதுகாப்ப்பு

பொதுவாக முதுமை காலத்தில் மூத்த குடிமக்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கும் நிலையில், தனியார் துறை ஊழியர்களுக்கு அத்தகைய பயன்கள் எதுவும் கிடைக்காது. இதனால் மூத்த குடிமக்களுக்கு மருத்துவம், உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்குவது சற்று கடினமானதாக இருக்கும். இந்த நிலையில் இலவச மருத்துவ காப்பீடு வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது மூத்த குடிமக்களை மகிழ்ச்சியடை செய்யும் அறிவிப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
Exit mobile version