5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Petrol & Diesel Price : குறைந்தது கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலையில் ரூ.3 குறைய வாய்ப்பு!

Price Drop |2024 மார்ச் 15 ஆம் தேதி பெட்ரோல்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது அதன் பிறகு எரிபொருள்களின் சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  தற்போது கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனையின் மூலம் ரூ.15 மற்றும் டீசல் செல்லறை விற்பனை மூலம் ரூ.12 நிகர லாபம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Petrol & Diesel Price : குறைந்தது கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலையில் ரூ.3 குறைய வாய்ப்பு!
மாதிரி புகைப்படம் (Photo Credit : Anna Stepanova/Moment/Getty Images)
vinalin
Vinalin Sweety | Updated On: 27 Sep 2024 10:51 AM

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ரூ.2 முதல் ரூ.3 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக இக்ரா தரக் குறியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.100.75-க்கும், டீசல் லிட்டர் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசிக்கு மத்தியில் இந்த தகவல் பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் டீசல் விலை உண்மையில் குறைய வாய்ப்புள்ளதா, இக்ரா தரக் குறியீட்டு நிறுவனம் கூறுவது என்ன என்று விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : அஞ்சலக FD.. ரூ.25,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. தெரிஞ்சிக்கோங்க!

இக்ரா தரக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

இதுகுறித்து இக்ரா தரக் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கிரிஷ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடைசியாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டபோது கடந்த மார்ச் மாதத்தில் சர்வதே சந்தையில் ஒரு பேரில் கச்சா எண்ணையின் விலை 83 முதல் 84 டாலராக இருந்தது. இந்த நிலையில் செப்டம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை சராசரியாக பேரலுக்கு 75 டாலராக குறைந்துள்ளது. இதனால் இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் விநியோக நிறுவனங்களில் மோட்டார் வாகன எரிபொருள் சில்லரை விற்பனையில் லாபம் பரப்பு மெதுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து கச்சா எண்ணெய் விலை மாற்றமின்றி நிலையாக இருக்கும் பட்சத்தில், பெட்ரோல் டீசலில் சில்ரை விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Gold Price September 27 2024: ரூ.57 ஆயிரத்தை நெருங்கும் சவரன் .. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ!

மேலும், 2024 மார்ச் 15 ஆம் தேதி பெட்ரோல்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது அதன் பிறகு எரிபொருள்களின் சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  தற்போது கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனையின் மூலம் ரூ.15 மற்றும் டீசல் செல்லறை விற்பனை மூலம் ரூ.12 நிகர லாபம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. லாப வரம்பு அதிகரித்துள்ள நிலையில், அதில் ஒரு பகுதியை மோட்டார் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில், பெட்ரோல் டீசல் விலை ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி உள்நாட்டு சுத்திகரிப்பு திறன் 256.8 மில்லியன் டன்னாக உள்ளது.  நுகர்வு மற்றும் ஏற்றுமதி அதிகரித்து வருவதன் காரணமாக அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 306 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Insurance Scheme : 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசு அதிரடி!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்த வருகிறது. அதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் எழுச்சியை கண்டு வந்தன. வாகன ஓட்டிகளின் அன்றாட தேவையாக பெட்ரோல், டீசல் உள்ளதால் தொடர் விலை ஏற்றம் மக்களை கடுமையாக பாதித்தது.  இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News