PM Kisan : பிஎம் கிசான் 18வது தவணை பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?.. உடனே இத பண்ணுங்க!
18th Installment | பிஎம் கிசான் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 17 தவனைகள் பணம் செலுத்தப்பட்டு நிலையில், 18வது தவனையை எதிர்ப்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், 18வது தவனை பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
பிஎம் கிசான் திட்டம் என்றால் என்ன : பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது விவசாயிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சிறப்பு திட்டமாகும். அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியாக நலிவுற்ற விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும். ரூ.6,000 மொத்தமாக ஒரு தவணையாக வழங்கப்படாமல் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு மூன்று முறை விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். பிஎம் கிசான் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 17 தவணைகள் பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், 18வது தவணையை எதிர்ப்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், 18வது தவணை பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Fixed Deposit : 1 ஆண்டுக்கான FD திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட 17வது தவணை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிஎம் கிசான் 17வது தவணை பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில், 18வது தவணையை எதிர்ப்பார்த்து விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே சிலருக்கு பிஎம் கிசான் நிதி உதவுகி கிடைக்காமல் உள்ளது. பிஎம் கிசான் நிதி உதவி கிடைக்காமல் இருப்பதற்கு, விவசாயிகளின் விண்ணப்பம் ரிஜெக்ட் செய்யப்பட்டது கூட காரணமாக இருக்கலாம். எனவே உங்கள் பெயர் ரிஜெக்ட் செய்யப்பட்டுள்ளதா என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.
டிஜிட்டல் கேஒய்சி முடித்துவிட்டீர்களா?
பிஎம் கிசான் திட்ட பயனாளிகளில் தகுதியை அரசு மறுமதிப்பீடு செய்துள்ளது. அதன்படி, உங்கள் விவரங்கள் இந்த மறுமதிப்பீடு செய்யப்பட்ட அளவுகளோடு பொருந்தவில்லை என்றாலும் உங்கள் பெயர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அரசின் மறுமதிப்பீடு அளவீடுகளுடன் நீங்கள் ஒத்துப்போகிறீர்களா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். அப்படியும் இல்லையென்றால் நீங்கள் டிஜிட்டல் கேஒய்சி முடிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். கேஒய்சி முடிக்காத விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் கிடைப்பதில் தாமதமோ அல்லது பணம் கிடைக்காமலோ போக வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் கேஒய்சி செய்யவில்லை என்றால் உடனடியாக அதை செய்து முடியுங்கள்.
இதையும் படிங்க : Credit Card Scam : கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.72 லட்சத்தை இழந்த மூதாட்டி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..பாதுகாப்பாக இருப்பது எப்படி?
பிஎம் கிசான் பட்டியலில் உங்கள் பெயர் நிராகரிப்பட்டுள்ளதா என்பதை சோதிப்பது எப்படி?
- முதலில் பிஎம் கிசான் இளையதளத்திற்கு செல்லுங்கள்.
- அங்கு முகப்பு பக்கத்தில் இருக்கும் டேஷ்போர்டு என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அதில் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் கிராமம் உள்ளிட்ட தகவலகளை நிரப்புங்கள். அதன் பின் “ஷோ” என்பதை கிளிக் செய்யுங்கள்.
- பிறகு ஆதார் ஸ்டேட்டஸ் என்பதில் ரிஜெக்டட் என்று தேர்வு செய்யுங்கள்.
- அதற்கு பிறகு பிஎம் கிசான் சம்மன் நிதி நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் அடங்கிய தகவல் பட்டியல் காண்பிக்கப்படும்.
அதில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.