Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டம் என்றால் என்ன?.. வட்டி மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Benefits of Post Office Scheme | தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கு தற்போது 4% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வட்டி கணக்கிடப்படுகிறது. வருமான வரி விதிகளின்படி, ஒரு தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் ஆண்டுக்கு ரூ. 10,000-க்கும் குறைவாக வருமானம் ஈட்டினால் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது 10,000-க்கும் குறைவாக வருமானம் ஈட்டினால் வரி செலுத்த தேவையில்லை.
சேமிப்பு திட்டங்கள் : நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப பொருளாதாரமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயருகிறது. இவ்வாறு தொடரும் விலை உயர்வு மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால் தனியார் திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படும் சூழலில் அரசின் முதலீடு திட்டங்களில் முதலீடு செய்ய பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஏனென்றால் அரசின் முதலீடு திட்டங்களில் சிறந்த வட்டி கிடைப்பதுடன் நல்ல வரவு கிடைக்கிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் தபால் நிலைய சேமிப்பு திட்டம். தபால் நிலைய சேமிப்பு திட்டம் என்றால் என்ன, அதில் எவ்வாறு முதலீடு செய்வது உள்ளிட்ட முக்கிய விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
தபால் அலுவலக சேமிப்பு திட்டம் என்றால் என்ன?
மத்திய மற்றும் மாநில அரசுகளால் தபால் நிலையங்கள் மூலம் வழங்கப்படும் சேமிப்பு திட்டம் தான் தபால் நிலைய சேமிப்பு திட்டம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் நிலையான வட்டி வழங்கப்படுகிறது. நம்பகதன்மையுடன் கூடிய முதலீட்டு திட்டங்களை தேடும் நபர்களுக்கு தபால் நிலைய சேமிப்பு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த சேமிப்பு திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கு தற்போது 4% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வட்டி கணக்கிடப்படுகிறது. வருமான வரி விதிகளின்படி, ஒரு தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் ஆண்டுக்கு ரூ. 10,000-க்கும் குறைவாக வருமானம் ஈட்டினால் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது 10,000-க்கும் குறைவாக வருமானம் ஈட்டினால் வரி செலுத்த தேவையில்லை.
இதையும் படிங்க : PM-JAY : ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசின் அசத்தல் திட்டம்.. முழு விவரம் இதோ!
தாபால் நிலைய சேமிப்பு கணக்கை திறப்பது எப்படி
- முதலில் உங்கள் வீட்டின் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்றோ அல்லது இணையதளத்தில் இருந்தோ விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- படிவத்தில் கேட்கபட்டுள்ள விவரங்களை நிரப்ப வேண்டும்.
- பிறகு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்பிப்பதன் மூலம் தபால் நிலைய சேமிப்பு கணக்கை எளிதாக திறக்கலாம்.
இந்த தபால் நிலைய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்த பட்சம் 18 வயது முழுமயடைந்திருக்க வேண்டும். ஒருவேளை மைனராக இருந்தால் குறைந்தபட்சம் 10 வயது முழுமையாகி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.