PPF Rules Changed : பிபிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்.. இன்று முதல் அமலுக்கு வருகிறது.. என்ன என்ன மாற்றங்கள் தெரியுமா?
PPF | இந்திய நிதி அமைச்சகத்தில் பொருளாதார விவகாரங்கள் துறை, பிபிஎஃப்-ல் சில திருத்தங்களை மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவை இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் சிறார்களுக்கு, பல கணக்குகளை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரின் நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஆதார் கார்டு முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் பிபிஎஃபிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் இன்று ( அக்டோபர் 1) தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிபிஎஃபில் என்ன என்ன புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, அது பயனர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Ration Shop : இனி வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை.. எல்லாமே ரேஷன் கடையில் வரப்போகுது.. அரசின் அதிரடி திட்டம்!
பிபிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றங்கள்
இந்திய நிதி அமைச்சகத்தில் பொருளாதார விவகாரங்கள் துறை, பிபிஎஃப்-ல் சில திருத்தங்களை மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவை இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் சிறார்களுக்கு, பல கணக்குகளை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரின் நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இதையும் படிங்க : Gold Price October 01 2024: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? செக் பண்ணுங்க!
திருத்தப்பட்ட பிபிஎஃப் விதிகள் என்ன?
- சிறார்கள் 18 வயதை அடையும் வரை அவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார்கள் 18 வயதை அடைந்த பிறகு அவர்களுக்கு பிபிஎஃப்-க்கு உரிய வட்டி வழங்கப்படும்.
- இதன் முதிர்வு காலம் அவர்கள் பருவத்தை அடைந்த போதில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இதையும் படிங்க : Ration Card : ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட் நியூஸ்.. அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
பல பிபிஎஃப் கணக்குகளுக்கான விதிகள்
- பல பிபிஎஃப் கணக்குகளை வைத்திருக்கும் தனிநபர்களுக்கான வட்டி விகிதங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யும் முதன்மை கணக்குகளுக்கு உரிய வட்டி வழங்கப்படும்.
- அனைத்து பிஎஃப் கணக்குகளிலும் உள்ள தொகை மொத்த தொகையையும் விட குறைவாக இருந்தால், இரண்டாவது கணக்கில் உள்ள தொகை முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- ஒருவேளை இரண்டாவது கணக்கில் எல்லாவற்றையும் விட அதிக தொகை இருந்தால், அந்த பணம் எந்த வித வட்டியும் வழங்கப்படாமல் திருப்பி செலுத்தப்படும்.
- மேலும், முதன்மை கணக்கை தவிர மத்த எந்த கணக்குகளுக்கும் வட்டி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
- இது பல கணக்குகளை பயன்படுத்துவதௌ தவிர்க்கவும், முதன்மை முதலீட்டில் இருந்து வருமானத்தை பெறவும் ஊக்குவிக்கிறது.
இதையும் படிங்க : RBI : அமெரிக்கா, ஜெர்மனியை விட பணவீக்கத்தை சிறப்பாக கையாண்ட இந்தியா.. ரிசர்வ் வங்கி புகழாரம்!
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிபிஎஃப் விதிகள் மாற்றம்
- பிபிஎஃப் கணக்குகளை பயன்படுத்தும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- அவர்கள் தங்களது பிஎஃப் கணக்கு முதிர்ச்சி அடையும் வரை பயன்படுத்தலாம். எனினும் அவர்கள் செப்டம்பர் 30, 2024 ஆம் ஆண்டு வரை POSA வட்டியை பெறுவார்கள்.
- அதன் பிறகு அவர்களுக்கு எந்த வித வட்டியும் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Post Office Scheme : வட்டி மட்டுமே ரூ.20,500.. அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!
பிபிஎஃப்-ன் இந்த திருத்தப்பட்ட புதிய விதிகள் வெளிநாடு வாழ் இந்தியர்களை பாதிக்கும் விதமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.