டீ, பிஸ்கட் எல்லாம் இனி சாப்பிட முடியாது போலயே.. உயரப்போகுது விலை… வெளியான முக்கிய தகவல்!
பணவீக்கம் காரணமாக சில உணவு பொருட்களின் விலைகள் உயரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, டீ, பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு போன்ற அன்றாடப் பொருட்களின் விலைகள் உயரலாம் என்று கூறப்படுகிறது.
பணவீக்கம் காரணமாக சில உணவு பொருட்களின் விலைகள் உயரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL), கோத்ரேஜ் கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (GCPL), Marico, ITC மற்றும் Tata Consumer Products Limited (TCPL) போன்ற பெரிய நிறுவனங்களின் விற்பனை குறைந்த வருவதால் விலை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டீ, பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு போன்ற அன்றாடப் பொருட்களின் விலைகள் உயரலாம் என்று கூறப்படுகிறது.
உயரப்போகும் டீ, பிஸ்கட் விலை
இதற்கு முக்கிய காரணம் உற்பத்தி செலவு மற்றும் பணவீக்கம். இதன் காரணமாக கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் எஃப்எம்சிஜி (Fast Moving Customer Goods For FMCG) நிறுவனங்களின் விற்பனை குறைந்துள்ளன. எஃப்எம்சிஜி நிறுவனங்கள் என்றால் நுகர்வோர்களுக்கு பாக்கெட்டுகள் மூலம் குறைந்த விலையில் வழங்கும் நிறுவனமாகும்.
இந்த எஃப்எம்சிஜி நிறுவனம் தான் கடந்த காலாண்டில் வணிக ரீதியாக பெரிய அடியை வாங்கியுள்ளது. இதனால் அதினின் விற்பனை மந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எஃப்எம்சிஜி நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் பாமாயில், காபி மற்றும் கோகோ போன்ற மூலப்பொருட்களின் விலைகள் சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளன.
இதன் விளைவாக, சில எஃப்எம்சிஜி நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. அதன்படி, டீ, பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு போன்ற அன்றாடப் பொருட்களின் விலைகள் உயரலாம் என்று கூறப்படுகிறது.
காரணம் என்ன?
குறிப்பாக, ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL), கோத்ரேஜ் கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (GCPL), Marico, ITC மற்றும் Tata Consumer Products Limited (TCPL) போன்ற பெரிய நிறுவனங்களின் விற்பனை குறைந்ததால் அதனை ஈடுசெய்ய விலை ஏற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், “எஃப்எம்சிஜி துறையின் மொத்த விற்பனையில் 65-68 சதவிகிதம் நகர்ப்புறங்களில் உள்ளது. மாறாக, நகர்ப்புற சந்தைகளுடன் ஒப்பிடுகையில் கிராமப்புற சந்தைகள் தங்கள் வளர்ச்சி விகிதத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன” என்றனர்.
Also Read : அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?
இது தொடர்பாக ஜிசிபிஎல் நிறுவன உரிமையாளர் சுதீர் சிதாபதி கூறுகையில், ” லாப வரம்புகளை மீட்டெடுக்கவும், விலை உயர்வை எச்சரிக்கையுடன் வெளியிடுவோம். இந்தியாவில் ஏற்ற இறக்கமான எண்ணெய் விலைகள் மற்றும் நுகர்வோர் தேவை குறைந்து வந்தாலும் GCPL, Cinthol, Godrej No. 1 மற்றும் HIT போன்ற பிரபலமான நிறுவனங்களின் செயல்திறன்கள் சரியாக இருந்தது. இருப்பினும், பணவீக்கம் காரணமாக சில பொருட்களின் விலை உயர்த்த உள்ளோம்” என்றார்.
அடுத்த என்ன?
கடந்த மாதம் பாமாயில் விலை உயர்ந்தது. செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இதனால், பாமாயில் விலை கடுமையாக உயர்ந்தது. சோயாபீன் எண்ணெய், பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு உயர்த்தியது.
இதனால் சமையல் எண்ணெய்களின் விலை அதிரடியாக உயர்ந்தது. சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்யின் இறக்குமதி வரியை 5.5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதமாக உயர்த்தியது. அதேபோல, சமையல் எண்ணெய் மீதான வரியும் 13 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
Also Read : தீபாவளி பட்டாசு விற்பனை.. ரூ.6,000 கோடிக்கு விற்பனை செய்து அசத்திய சிவகாசி ஆலைகள்!
இதனால் எண்ணெய் இறக்குமதி இந்தியாவில் குறைந்தது. இதன் காரணமாக பாமாயில் உள்ளிட்ட எண்ணெய்கள் விலை உயர்ந்தது. இப்படியான சூழலில், தற்போது டீ, பிஸ்கட் என முக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.