5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இவ்ளோ கம்மி விலையில் ஹோம் லோனா? நீங்க வீடு வாங்குவது சத்தியம்!

Home loans: ஹோம் லோனுக்கு குறைவான வட்டி விகிதக்கும் இந்திய பொதுத்துறை வங்கிகள் குறித்து பார்க்கலாம். இந்தப் பட்டியலில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

இவ்ளோ கம்மி விலையில் ஹோம் லோனா? நீங்க வீடு வாங்குவது சத்தியம்!
ஹோம் லோன்
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 29 Nov 2024 12:09 PM

ஹோம் லோன் பொதுத்துறை வங்கி வட்டி விகிதங்கள்: இந்திய ரிசர்வ் வங்கி 2024 ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடந்த பணவியல் கொள்கை மதிப்பாய்வில் வட்டி விகிதங்களை உயர்த்தவில்லை. இதனால் கடன் வாங்குபவர்கள் மீண்டும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் விகிதங்களை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள பல்வேறு வாடிக்கையாளர்களும் முனைகின்றனர். இதற்கிடையில், பல்வேறு பொதுத்துறை வங்கிகளும் போட்டி ஹோம் லோன் திட்டங்களை அறிவித்துள்ளன. இந்த வீட்டுக் கடன் விகிதங்கள், 20 ஆண்டு கால அவகாசத்துடன் ரூ.75-லட்சம் கடனில் தொடங்குகின்றன. இதற்கு ஆரம்ப கால வட்டியாக 8.35 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்களை வழங்கும் பொதுத்துறை வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பேங்குகள் 8.40 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகின்றன. இந்த வீட்டுக் கடன்கள் 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுடன் வருகின்றன.

இதையும் படிங்க : 400 நாள்கள் எஃப்.டிக்கு 8.05 சதவீதம் வட்டி.. இந்தியன் வங்கியின் அசத்தல் அறிவிப்பு!

யூகோ வங்கி

யூகோ வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை 8.45 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 8.50 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

8.35 சதவீதத்தில் தொடங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகியவை மிகவும் குறைவான வட்டியை வீட்டு கடன்களுக்கு வழங்குகின்றன.

சொந்த வீடு என்ற கனவு பலருக்கும் நிகரற்ற உணர்வாக காணப்படுகிறது. அவர்கள், சொத்து வாங்குவதை உறுதி செய்ய வீட்டுக் கடனைத் தேர்வு செய்யலாம். வீட்டுக் கடனைப் பெறுவதில் ஒரு ஒருங்கிணைந்த பகுதி நிதித் திட்டமிடல் அவசியம்.
ஏனெனில், இது வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த சரியான திட்டமிடலை வழங்குகிறது.

வீட்டுக் கடன் திட்டமிடலின் நன்மைகள்

உகந்த கடன் தொகையை அறிதல்: கடனாளிகள் கடன் தவணைக்காலம் மற்றும் தொகையை பரிசோதித்து, இயல்புநிலை மற்றும் தாமதக் கட்டணங்களைத் தவிர்க்க இது உதவும்.
நிதித் திட்டமிடல்: பயனுள்ள மாதாந்திர நிதித் திட்டமிடலுக்காக முன்கூட்டியே தவணைகளை அளவிட இது உதவும்.
சிறந்த லோன் ஆஃபர்: உங்கள் நிதி நிலைக்கு ஏற்ப சிறந்த சலுகையைத் தீர்மானிக்க இது உதவும்.

ஹோம் லோன் பாதகங்கள்

எனினும் வீட்டுக் கடன் திட்டத்தில் சில பாதகங்களும் உள்ளன. அதில் முதன்மையானதாக நீண்டகால கடன் செலுத்தல் உள்ளது. அதாவது, மாதாந்திர தவணைகள் 10-15 ஆண்டுகள் நீடிக்கும். சில நேரங்களில் இது ஓரு சில நேரங்களில் தனிப்பட்ட நிதியில் பெரும் சுமையை சுமத்துகின்றன.
மேலும், சில நேரங்களில் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, வாங்கிய சொத்து எதிர்பார்த்த வருமானத்தைத் தராமல் போகலாம். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து வளர்ச்சியை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 6 மாதத்தில் லட்சாதிபதி.. இந்த டாப் 5 ஃபண்டுகளை பாருங்க!

Latest News