Ratan Tata : வெறும் $5 பில்லியன் சொத்துக்களை $100 பில்லியனாக மாற்றிய ரத்தன் டாடா!
Ratan Tata Demise | 1937 ஆம் ஆண்டு, டிசம்பர் 28 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் ரத்தன் டாடா. டாடாவின் குழந்தை பருவத்திலேயே அவரது பெற்றோர் பிரிந்துவிட்டதால, முழுவதுமாக பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார் டாடா. அந்த சூழல் அவரை வாழ்க்கையில் பக்குவமடைய செய்தது. கார்னல் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு வணிக பள்ளி ஆகியவற்றில் உயர்கல்வி பயின்றார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. இவர் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். ரத்தன் டாடா கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டு உடல்நிலை மோசமாகி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (அக்டோபர் 09) இரவு உயிரியழந்தார். ரத்தன் டாடா தனது 86வது வயதில் உயிரிழந்துள்ள நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் அவர் செய்த தொண்டுகளையும், வளர்ச்சி பணிகளையும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள், பொதுமக்கள் நினைவுக்கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வெறும் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை ரத்தன் டாடா, சுமார் 100 பில்லியன் டாலர் சொத்துக்களாக மாற்றியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Share Market : உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.. டாடா பங்குகளில் கவனம் செலுத்தும் முதலீட்டாளர்கள்!
1937 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ரத்தன் டாடா
1937 ஆம் ஆண்டு, டிசம்பர் 28 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் ரத்தன் டாடா. டாடாவின் குழந்தை பருவத்திலேயே அவரது பெற்றோர் பிரிந்துவிட்டதால், முழுவதுமாக பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார் டாடா. அந்த சூழல் அவரை வாழ்க்கையில் பக்குவமடைய செய்தது. கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு வணிக பள்ளி ஆகியவற்றில் உயர்கல்வி பயின்றார். இதனை தொடர்ந்து 1961 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். ஆரம்ப காலத்தில் எந்த பதவிகளையும் வகிக்காத டாடா, தொழிலாளர்களுடன் தொழிலாளராக இணைந்து பணியாற்றினார். அது அவருக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது.
இதையும் படிங்க : Gold Price October 10 2024: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
வெறும் 5 பில்லியன் டாலர் சொத்துக்களை 100 பில்லியனாக மாற்றிய டாடா
இதனை தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு டாடா சன்ஸ்-ன் தலைவராக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டார். தனது தொலைநோக்கு பார்வை மற்றும் கூர்மையான சிந்தனையால் பல மாற்றங்களை செய்தார் டாடா. குறிப்பாக அதுவரை வெறும் 5 பில்லியன் டாலராக இருந்த டாடா சன்ஸ் குழுமத்தின் ஆண்டு வருமானம், ரத்தன் டாடா பதவி விலகியபோது சுமார் 100 பில்லியன் டாலர்களாக உயர்ந்து இருந்தது. இது டாடா குழுமத்தை அசுர வளர்ச்சிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : UPI : UPI 123 Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனை வரம்பை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. எவ்வளவு தெரியுமா?
இந்தியாவையும், இந்தியர்களையும் முன்னிலைப்படுத்திய ரத்தன் டாடா
ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் வளர்ச்சிக்காக மட்டுமன்றி இந்தியாவின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்தியாவையும், இந்தியர்களையும் டாடா எப்போதுமே முன்னிலை படுத்தி வந்தார். இந்திய மக்களுக்குக்காக பல சிறப்புகளை செய்து கொடுத்தவர் ரத்தன் டாடா. வணிகம், வருமானத்தை மட்டுமே நோக்கமாக கொல்லாமல் கொடை உள்ளத்தில் சிறந்து விளங்கினார். குறிப்பாக தங்களது ஆண்டு வருமானத்தில் சுமார் 66% கொடையாக வழங்கி வருகிறது டாடா தொண்டு நிறுவனம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழிலதிபர்கள் கடும் விமர்சனங்களையும், மோசடி புகார்களையும் பெற்ற நிலையில், மக்களின் வெறுப்பை சம்பாதிக்காத ஒரே தொழிலதிபராக டாடா திகழ்ந்தார். டாடாவின் மறைவு இந்தியாவின் ஏழை, எளிய மக்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது.