5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ratan Tata : பட்ஜெட் எதிரொலி.. ஒரே நாளில் ரூ.19,000 கோடி அதிகரித்த டைட்டன் நிறுவன மதிப்பு!

Ratan Tata's Titan | மத்திய பட்ஜெட்டில் தங்கம்  மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ல் இருந்து 6% ஆக  குறைக்கப்பட்ட  நிலையில், டாடா நிறுவனத்தின் டைட்டன் பங்கு தோராயமாக 7% உயர்ந்துள்ளது. டாடாவின் நிறுவனமான டைட்டன் அதன் முன்னணி பிராண்டான தனிஷ்க் காரணமாக இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

Ratan Tata : பட்ஜெட் எதிரொலி.. ஒரே நாளில் ரூ.19,000 கோடி அதிகரித்த டைட்டன் நிறுவன மதிப்பு!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 24 Jul 2024 12:47 PM

டாடா நிறுவனம் : மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில், நேற்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் தங்கள் விலை ரூ.2,000 குறைந்தது. அதனை தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம், மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் டாடா நிறுவனத்தின் மதிப்பு ஒரே நாளில் ரூ.19,000 கோடி அதிகரித்துள்ளது.

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைப்பு – டைட்டன் பங்குகள் உயர்வு

மத்திய பட்ஜெட்டில் தங்கம்  மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ல் இருந்து 6% ஆக  குறைக்கப்பட்ட  நிலையில், டாடா நிறுவனத்தின் டைட்டன் பங்கு தோராயமாக 7% உயர்ந்துள்ளது. டாடாவின் நிறுவனமான டைட்டன் அதன் முன்னணி பிராண்டான தனிஷ்க் காரணமாக இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

டைட்டனின் பங்குகள் மேலும் உயரும் – பொருளாதார வல்லுநர்கள்

பிஎஸ்இ தரவுகளின்படி, டைட்டனின் பங்குகள் 6.63% உயர்ந்து ரூ.3,648-ல் முடிவடைந்தது. வர்த்தக அமர்வின் போது பங்குகள் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.3,490 ஐ எட்டியது. இது 7.30% அதிகரிப்பை குறிக்கிறது. ஆரம்பத்தில் டைட்டனின் பங்குகள் ரூ.3,252-ல் தொடங்கிய நிலையில், இந்த நிறுவனத்தின் பங்குகள் மேலும் உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் ரூ.19,000 கோடி அதிகரித்த டைட்டனின் பங்குகள்

முதலீட்டாளர்களின் பார்வையில் இது மிகவும் லாபகரமானதாக உள்ளது. உதாரணமாக ஒரு முதலீட்டாளர்  10,000 டைட்டன் பங்குகளை வைத்திருந்தால், ஒரு பங்கிற்கு ரூ.215.55 அதிகரித்து அந்த 10,000 பங்குகளில் அவர்கள் ரூ.2,155.500 பெறுவார்கள். முன்னதாக டைட்டனின் மொத்த மதிப்பு ரூ.2,88,757 கோடியாக இருந்தது. இந்நிலையில் அது நேற்று ரூ.3,07,897 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி டைட்டன் நிறுவனத்தில் மதிப்பு ஒரே நாளில் ரூ.19,000 கோடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office FD : வெறும் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.15,00,000 பெறலாம்.. அசத்தலான அஞ்சலக FD திட்டம்.. முழு விவரம் இதோ!

நேற்று பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான இறக்குமதி வரியையை 15%-ல் இருந்து 6% ஆக குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார். அதேபோல பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரியையும் 12%-ல் இருந்து 6.4% ஆக குறைத்து அறிவிப்பை வெளியிட்டார். இதனால் கல்ல சந்தையில் வியாபாரம் குறைந்து முதலீட்டாளர்கள் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், டைடன் நிறுவனத்தின் மதிப்பு ஒரே நாளில் ரூ.19,000 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News