Ration Shop : 5 ஆம் தேதிக்குள் ரேஷன் பொருட்களை வாங்கிவிடுங்கள்.. இல்லனா சிக்கல்!
September 5 | குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை ரேஷன் கடைக்கு செல்லும்போதும் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் ரேஷன் கடைகள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் பயனர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் கார்டு : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டம் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன. அதன்படி குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை ரேஷன் கடைக்கு செல்லும்போதும் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் ரேஷன் கடைகள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் பயனர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Aadhaar & PAN : வாட்ஸ்அப்பில் ஆதார் மற்றும் பான் கார்டு டவுன்லோட் பண்ணலாமா.. அட இது தெரியாம போச்சே!
வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த ரேஷன் கடை ஊழியர்கள்
அதாவது வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி, ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 35,000 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அனைத்து ரேஷன் அகடை ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள போவதாக அறிவித்துள்ளதால, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் அறிவித்துள்ளார். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிப்பதிவேடு பராமரிப்பு, வங்கி மூலம் ஊதியம், 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம கார்டு வழங்கப்பட வேண்டும், விற்பனை முனையத்தில் பின்பற்றப்படும் 2 முறை விற்பனை முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Ration Card : ரேஷன் கார்டில் இறந்தவர் பெயரை நீக்க வேண்டுமா.. அலைய தேவையில்லை.. ஆன்லைனில் ஈசிய பண்ணிடலாம்!
செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்
எனவே ரேஷன் அட்டை தாரர்கள் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் ரேஷன் பொருட்களை வாங்கும் பட்சத்தில், போராட்டத்தால் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.