UPI : UPI 123 Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனை வரம்பை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. எவ்வளவு தெரியுமா? - Tamil News | RBI Increased UPI 123 Pay and UPI Lite transaction limit | TV9 Tamil

UPI : UPI 123 Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனை வரம்பை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. எவ்வளவு தெரியுமா?

Reserve Bank of India | நாணைய கொள்கைக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் UPI சேவையை பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, UPI 123 Pay மற்றும் UPI Lite ஆகியவற்றுக்கான பண பரிவர்த்தனை வரம்பை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

UPI : UPI 123 Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனை வரம்பை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. எவ்வளவு தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

09 Oct 2024 15:58 PM

இன்று (அக்டோபர் 09) நாணைய கொள்கைக் குழு கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், UPI (Unified Payment Interface) பண பரிவர்த்தனையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் UPI சேவைகளை பயன்படுத்துவதால், அதனை எளிதாக்கும் நோக்கில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாணைய கொள்கைக் குழு கூட்டத்தில் நடந்தது என்ன?, UPI-ல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ-ன் Green Rupee Term Deposit.. பொது குடிமக்களுக்கு கிடைக்கும் லாபம் எவ்வளவு?

UPI 123 Pay மற்றும் UPI Lite-ன் பண பரிவர்த்தனை வரம்பு அதிகரிப்பு

நாணைய கொள்கைக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் UPI சேவையை பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, UPI 123 Pay மற்றும் UPI Lite ஆகியவற்றுக்கான பண பரிவர்த்தனை வரம்பை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ-ன் Green Rupee Term Deposit.. ரூ.2.50, ரூ.5, ரூ.7.50 மற்றும் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

நாணைய கொள்கைக் குழு கூட்டத்திற்கு பிறகு சக்திகாந்த தாஸ் உரை

இது குறித்து தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை எளிதாக்கியதன் மூலம் UPI சேவை இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளார். இதனை மேலும் விரிவடைய செய்யும் நோக்கில் UPI பண பரிவர்த்தனை வரம்புன் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, UPI123Pay-ன் பண ஒரு பரிவர்த்தனை வரம்பு ரூ.5,000 முதல் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல UPI Lite-ன் ஒரு பண பரிவர்த்தனை வரம்பு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : FD Interest Rate : 2 முதல் 5 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

ஃபீச்சர் போன் பயன்ரகளின் வரம்பு இரட்டிப்பாக அதிகரிப்பு

ரிசர்வ் வங்கி UPI 123 Pay-க்கான பண பரிவர்த்தனை வரம்பை உயர்த்தியுள்ளதன் மூலம் ஃபீச்சர் போன் பயன்ரகளின் வரம்பு இரட்டிப்பாக அதிகரிக்கிறது. அதுமட்டுமன்றி, பயனர்களின் குறைந்த அளவிளான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில் UPI Lite வாலட்களுக்கான வரம்பு ரூ.2,000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

இந்தியாவில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ பண பரிவர்த்தனை செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய காய்கறி கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை உள்ளதால் பெரும்பாலான மக்கள் யுபிஐ சேவைக்கு மாறிவிட்டனர். சொல்லபோனால் இப்போதெல்லாம் யாரும் கையில் காசு வைத்துக்கொள்வதில்லை. எல்லாமே யுபிஐ தான். மொபைல் போன்களின் வளர்ச்சியால் யுபிஐ இந்தியாவின் கடைகோடி கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இதனை மேலும் விரிவடைய செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version