RBI : இனி கிராமத்திலும் ஈசியா லோன் கிடைக்கும்.. ரிசர்வ் வங்கி அதிரடி!
Reserve Bank | சமீபத்தில் ஒரு புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படுவதன் மூலம் கிராமத்தில் இருப்பவர்களுக்கும் சுலபமாக வங்கி கடன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி : இந்தியாவின் முன்னணி வங்கியான ஆர்.பி.ஐ அவ்வப்போது பொதுமக்களுக்கு பயன் தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி சமீபத்தில் ஒரு புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படுவதன் மூலம் கிராமத்தில் இருப்பவர்களுக்கும் சுலபமாக வங்கி கடன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள அந்த புதிய திட்டம் என்ன, அதில் என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளது, யார் யார் பயன்பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : PAN Card : பான் கார்டில் தந்தை பெயர் இல்லை என்றால் செல்லாதா?.. வருமான வரித்துறை கூறுவது என்ன?
ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை
டிஜிட்டல் வங்கிகளில் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஒரு புதிய திட்டத்தின் முன்னோடி திட்டத்தை அறிமுகம் செய்தது. இடையூறு இல்லாத கடன் தளம் என்ற திட்டம் தான் அது. அதாவது, கடன் பெறும் செயல்முறையை எளிதாக்குவது தான் இந்த திட்டத்தின் முழு நோக்கம் ஆகும். தற்போது அந்த தளத்தின் பெயர் Unified Lending Interface (ULI) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
யூனிஃபைட் லெண்டிங் இன்டர்ஃபேஸ் என்றால் என்ன?
இந்த திட்டம் குறித்து பெங்களூருவில் ஒரு பேட்டியில் தெரிவித்த ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த் தாஸ், ULI கடன் வழங்கும் செயல்முறையை எளிமையாகவும், வேகமாகவும் மாற்றும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் கடன் வழங்குவதை எளிதாக்கும். ஏனெனில் கடன் வழங்கும் நிறுவனங்கள், நிலப் பதிவுகள் போன்ற முக்கியமான டிஜிட்டல் தகவல்களை ஒரே இடத்தில் இருந்து பெருகின்றன. இது கடன் செயலாக்கத்தில் ஈடுபடும் நேரத்தையும் ஆவணங்களையும் குறைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Unified Pension Scheme: ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் என்றால் என்ன? யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம்!
திட்டம் மூலம் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் பயனடையும்
நாட்டின் சிறு கிராமங்கள், நகரங்கள் மற்றும் சிறு-நடுத்தர நிறுவனங்களுக்கு ULI மிகவும் பயனளிக்கும் என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த் தாஸ் கூறியுள்ளார். ULI பிளக் அண்ட் ப்ளே மாதிரியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே எந்த நிறுவனமும் இதை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட முன்னோடி திட்டத்தின் அனுபவங்களின் அடிப்படையில் ULI விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.