5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit: 8.75% வரை வட்டி.. FD திட்டங்களின் வட்டி விகிதங்களை திருத்திய RBL!

RBL | பொதுமக்கள் தங்கள் எதிர்கால வாழ்வை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றுவதற்கு இந்த நிலையான வைப்பு நிதி திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவையாகவும், லாபகரமானவையாகவும் கருதப்படுகின்றன. எனவே ஏராளமான பொதுமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்கின்றனர்.

Fixed Deposit: 8.75% வரை வட்டி.. FD திட்டங்களின் வட்டி விகிதங்களை திருத்திய RBL!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 17 Dec 2024 17:50 PM

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் FD (Fixed Deposit) என்று அழைக்கப்படும் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், RBL வங்கியும் பல்வேறு கால அளவீடுகளை கொண்ட எஃப்டி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தனது நிலையான வைப்பு நிதி திட்டங்களின் வட்டி விகிதங்களை அந்த வங்கி மாற்றியமைத்துள்ளது. அதன்படி, பொது குடிமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 8 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.50 சதவீதம் வரையும், மிக மூத்த குடிமக்களுக்கு 8.87 சதவீதம் வரையும் வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Farmer Loan : விவசாயிகளுக்கான உத்தரவாதம் இல்லா வங்கி கடன்.. ரூ.2 லட்சமாக உயர்த்தி அறிவித்த ஆர்பிஐ!

7 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான திட்டங்கள்

  • 7 நாட்கள் முதல் 14 நாட்கள் – பொது குடிமக்களுக்கு 3.50 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 4 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
  • 15 நாட்கள் முதல் 45 நாட்கள் – பொது குடிமக்களுக்கு 4 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 4.50 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
  • 46 நாட்கள் முதல் 90 நாட்கள் – பொது குடிமக்களுக்கு 4.50 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

91 நாட்கள் முதல் 500 நாட்கள் வரையிலான திட்டங்கள்

  • 91 நாட்கள் முதல் 180 நாட்கள் – பொது குடிமக்களுக்கு 4.75 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 5.25 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
  • 181 நாட்கள் முதல் 240 நாட்கள் – பொது குடிமக்களுக்கு 5.50 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 6 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
  • 214 நாட்கள் முதல் 364 நாட்கள் – பொது குடிமக்களுக்கு 6.05 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 6.55 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
  • 365 நாட்கள் முதல் 452 நாட்கள் – பொது குடிமக்களுக்கு 7.50 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
  • 453 நாட்கள் முதல் 499 நாட்கள் – பொது குடிமக்களுக்கு 7.80 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 8.30 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
  • 500 நாட்களுக்கான திட்டம் – பொது குடிமக்களுக்கு 8 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 8.50 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Aadhaar Update : இலவச ஆதார் திருத்தம்.. அவகாசத்தை நீடித்த UIDAI.. எப்போது வரை தெரியுமா?

16 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான திட்டங்கள்

  • 16 மாதங்கள் 16 நாட்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான திட்டம் – பொது குடிமக்களுக்கு 7.80 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
  • 18 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான திட்டம் – பொது குடிமக்களுக்கு 7.80 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
  • 24 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரையிலான திட்டம் – பொது குடிமக்களுக்கு 7.50 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
  • 36 மாதங்கள் 1 நாள் முதல் 60 மாதங்கள் 1 நாள் வரையிலான திட்டம் – பொது குடிமக்களுக்கு 7.10 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
  • 60 மாதங்கள் 2 நாட்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான திட்டம் – பொது குடிமக்களுக்கு 7 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : RBI : 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்ட ரிசர்வர் வங்கி.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மேற்குறிப்பிட்ட இந்த திட்டங்களில் அதிக வட்டி கொண்டது 500 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டம் தான். இந்த திட்டத்திற்கு மூத்த குடிமக்கள் மற்றும் பொதுகுடிமக்களுக்கு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News