ஊடகத் துறையில் அதிரடி.. ரிலையன்ஸ், டிஸ்னி.. $.8.5 பில்லியன் ஒப்பந்தம்!

Reliance and Disney : இந்தியாவில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு பிராண்டுகளை ஒன்றிணைக்க கூட்டு முயற்சியை உருவாக்கும் பரிவர்த்தனையை ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி ஆகியவை நிறைவு செய்துள்ளன.

ஊடகத் துறையில் அதிரடி.. ரிலையன்ஸ், டிஸ்னி.. $.8.5 பில்லியன் ஒப்பந்தம்!

ரிலையன்ஸ், டிஸ்னி கூட்டு ஒப்பந்தம்

Published: 

15 Nov 2024 18:31 PM

Reliance and Disney deal: இந்தியாவில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு பிராண்டுகளை ஒன்றிணைக்க கூட்டு முயற்சியை உருவாக்கும் பரிவர்த்தனையை ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி ஆகியவை நிறைவு செய்துள்ளன. இது, நாட்டில் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றுவதற்கும், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகளில் நேரலையை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கும் உரிய பங்களிப்பை அளிக்கும். இதில், ரிலையன்ஸ் கூட்டு நிறுவனத்தில் ரூ.11 ஆயிரத்து 500 கோடியை முதலீடு செய்துள்ளது. இதன் தலைவராக நீடா அம்பானி இருப்பார்.

1.4 அமெரிக்க டாலர் முதலீடு

இதனை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், வயாகாம் 18 மீடியா பிரைவேட் லிமிடெட், தி வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆகியவை இன்று (நவ.15, 2024) அறிவித்தன. இதற்கு, தேசிய ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நியூஸ் 18 (வயாகாம் 18 ஊடகம்), ஜியோசினிமா வணிகங்களை ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் உடன் இணைப்பது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் வளர்ச்சிக்காக ரிலையன்ஸ் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது.

இதில் தலைவராக நீடா அம்பானியும், துணைத் தலைவராக உதய் சங்கர் என்பவரும் இருப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ்-ஐ பொறுத்தமட்டில் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் மிகவும் பிரபலமான மீடியா பிராண்டுகளுக்கு தாயகமாக உள்ளது.
இந்தியாவிலும் உலக அளவிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளடக்கத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கிவருகிறது.

புதிய சகாப்தம்

அந்த வகையில் இது ஒரு புதிய சகாப்தமாக இருக்கும். ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னியின் இந்த தனித்துவமான கூட்டு முயற்சியானது, நிறுவனங்களின் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் திறன்கள் இந்திய பார்வையாளர்களுக்கு மலிவு விலையில் தரமான சேவையே வழங்கும்.
இதற்கிடையில், மார்ச் 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் சுமார் ரூ.26,000 கோடி வருவாய் உடன் மிகப்பெரிய மீடியாயாக ரிலையன்ஸ் திகழ்கிறது. இது வருங்காலங்களில் அதிகரிக்கக் கூடும்.

50 மில்லியன் சந்தாதாரர்கள்

ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளங்கள் 50 மில்லியனுக்கும் அதிகமான சந்தாத் தளத்தை ஏற்கனவே கொண்டுள்ளன. கிரிக்கெட், கால்பந்து மற்றும் பிற விளையாட்டுகளின் ஒளிபரப்பு போர்ட்ஃபோலியோவை கொண்டுள்ளன.
முன்னதாக இந்தப் பரிவர்த்தனைக்கு இந்திய போட்டி ஆணையம் 27 ஆகஸ்ட் 2024 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. தவிர, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, துருக்கி, தென் கொரியா மற்றும் உக்ரைனிலும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 37 கோடி பயணிகள் இருந்தும் இழுத்து மூடும் விமான நிறுவனங்கள்.. என்னதான் சிக்கல், ஏன் இந்த நஷ்டம்?

மலிவு விலையில் சேவை உறுதி

இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் டி அம்பானி, “இதன் மூலம் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறது. எங்களின் ஆக்கப்பூர்வமான நிபுணத்துவம் மற்றும் டிஸ்னி உடனான உறவு, இந்திய பார்வையாளர்களுக்கு மலிவு விலையில் இணையற்ற சேவையே வழங்கும். இது வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.
தொடர்ந்து, தி வால்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் ஏ இகர், “இந்த கூட்டு முயற்சியின் மூலம் நாட்டின் சிறந்த பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றை நாங்கள் உருவாக்குகிறோம். இது எங்களுக்கும், இந்தியாவின் நுகர்வோருக்கும் ஓர் உற்சாகமான தருணம்” என்றார்.

3 சி.இ.ஓ.க்கள் நியமனம்

இந்தப் புதிய கூட்டு நிறுவனத்துக்கு 3 தலைமை செயல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் நிறுவனத்தின் லட்சியம் மற்றும் சேவையே திறம்பட கவனித்துக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மொத்த ஒப்பந்த பரிவர்த்தனை 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் கூறப்படுகிறது.

இதன்மூலம் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி ஊடகத் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.  ஏனெனில்,  இது மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய ஊடகத்துறையில் இரு நிறுவனங்களும் மிகவும் வலிமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஜியோ செய்திகள் மட்டுமின்றி சினிமா உள்ளிட்ட பொழுதுப்போக்கு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவை குறி வைக்கும் எலான் மஸ்க்.. அம்பானிக்கு காத்திருக்கும் சவால்.. என்ன நடக்கும்?

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?