5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Reliance Jio: ஒரு வருட இலவச வைஃபை.. ஏர்ஃபைபருக்கு ‘தீபாவளி டமாகா’ சலுகை!

Jio Diwali Offer: தீபாவளி சலுகையாக ஜியோ ஏர் ஃபைபரை ஒரு வருடத்திற்கு இலவசமாக அனுபவிக்க முடியும். இந்தச் சலுகை புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். இந்தச் சலுகை ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் வாங்கினாலும் அல்லது சிறப்பு ரீசார்ஜ் செய்தாலும் பொருந்தும்.

Reliance Jio: ஒரு வருட இலவச வைஃபை.. ஏர்ஃபைபருக்கு ‘தீபாவளி டமாகா’ சலுகை!
Jio (Photo Credit: Jio)
Follow Us
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 20 Sep 2024 22:26 PM

தீபாவளி சலுகையாக Jio Air Fiber ஒரு வருடத்திற்கு இலவசமாக அனுபவிக்க முடியும். இந்தச் சலுகை புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். இந்தச் சலுகை ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் வாங்கினாலும் அல்லது சிறப்பு ரீசார்ஜ் செய்தாலும் பொருந்தும். மேலும் செல்போன் கட்டணத்திற்கும் சலுகைகள் அறிவித்துள்ளது.  ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்குகிறது . ஜியோ எப்போதும் வாடிக்கையாளர்களின் திறனுக்கு ஏற்ப திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

புதிய வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள்:

புதிய Jio Airfiber வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கான இலவச சந்தாவை பெறலாம். அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகள் மற்றும் மை ஜியோ கடைகளில் ரூ.20 ஆயிரத்திற்கு இருக்கும் மேல் ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருள் அல்லது மின்சாதன பொருட்கள் போன்றவற்றை வாங்கினால் ஒரு வருடத்திற்கான Air Fiber இணைப்பை இலவசமாக பெறலாம்.மேலும் மூன்று மாத தீபாவளி சலுகை திட்டத்தின் கீழ் ரூ2,222 செலுத்தி ஒரு வருடத்திற்கான Air Fiber இணைப்பை பெறலாம்.

தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கான சலுகை:

தற்போதுள்ள Jio Air fiber சந்தாதாரர்கள் தீபாவளி சலுகை திட்டத்தின் கீழ் ரூ.2,222 செலுத்தி ஒரு வருட Jio Air Fiber இணைப்பை பெறலாம்.

கூப்பன்கள்:

ரீசார்ஜ் அல்லது புதிய இணைப்பு மூலம், வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 12 கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த கூப்பன் அவர்களின் Air Fiber திட்டத்தின் மதிப்பை பொறுத்து கொடுக்கப்படுகிறது. நவம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரை செல்லுபடியாகும் இந்த கூப்பன்களை 30 நாட்களுக்குள் ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ, ஜியோ பாயிண்ட் அல்லது ஜியோ மார்ட் பிரத்யேக கடைகளில் ரூ.15 ஆயிரம் மதிப்புமிக்க மின்சாதன பொருட்கள் வாங்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

Also Read: Amazon Great Indian Festival : அசத்தல் தள்ளுபடிகளுடன் வரப்போகும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. எப்போது தெரியுமா?

செல்போன் கட்டண சலுகை:

84 நாட்கள் வேலிட்டுக் கொண்ட திட்டங்களுக்கு அதிக தேவை உள்ளது. அடிக்கடி ரீசார்ஜ் செய்வதை தவிர்ப்பதற்கு 84 நாள் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் பலர் ரீசார்ஜ் அடிக்கடி செய்வதிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கு விரும்பினாலும் 365 நாள் திட்டங்களை தேர்ந்தெடுக்க தயங்குகிறார்கள். ஏனெனில் 365 நாள் திட்டங்களின் கட்டணங்கள் அதிக அளவில் இருக்கிறது. எனவே இத்தகைய தேவையின் காரணமாக 84 நாட்கள் வேலிடியுடன் 11 வகையான திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது.

ரூ.479 திட்டம் : 479 என்பது மிகக் குறைந்த விலையுள்ள 84 நாள் வேலிடிட்டி திட்டமாகும். இந்தத் திட்டம் மதிப்புத் திட்டப் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், 1,00 எஸ்எம்எஸ், 6 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ ஆப்ஸ் சந்தாவுடன் வழங்கப்படுகிறது.

ரூ.799 திட்டம்: 84 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ ஆப்ஸ் சந்தாவுடன் வழங்கப்படுகிறது.  இந்த ரீசார்ஜ் திட்டம் ஜியோவின் டிரெண்டிங் பட்டியலில் ஒன்றாகும்.

ரூ.889 திட்டம்: 84 நாள் செல்லுபடியாகும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா ஆகியவை வழங்கப்படுகிறது. ஜியோ ஆப்ஸ் தவிர, இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஜியோ சேவன் புரோ சந்தாவும் கிடைக்கிறது.

ரூ.949 திட்டம்: இந்த திட்டம் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் ஜியோ ஆப் சந்தாவுடன் வருகிறது. இது மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகிறது.

ரூ.1028 திட்டம்: வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் ஜியோ டேட்டா தவிர, இந்த திட்டத்தில் ஸ்விக்கி ஒன் லைட்டின் மூன்று மாத சந்தா மற்றும் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரூ.1029 திட்டம்: இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா ஆகியவை கிடைக்கும். இது அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான சந்தாவுடன் வருகிறது.

ரூ.1029 திட்டம்: அன்லிமிடெட் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் ஜியோ ஆப்களுக்கான சந்தா ஆகியவை இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் Sony Liv மற்றும் Zee 5 OTT சந்தாவும் கிடைக்கிறது.

ரூ.1199 திட்டம்: இந்த திட்டம் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், நீங்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி கூடுதல் டேட்டாவையும் பெறுவீர்கள்.

ரூ.1299 திட்டம்: இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா ஆகியவை கிடைக்கும். இது Netflix சந்தாவுடன் வருகிறது.

ரூ.1799 திட்டம்: இது ஜியோ வழங்கும் மிகவும் விலையுயர்ந்த 84 நாட்கள் வேலிடிட்டி திட்டமாகும். இந்த திட்டம் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவுடன் வருகிறது. இது Netflix அடிப்படை சந்தாவுடன் வருகிறது.

Also Read: RBI : அமெரிக்கா, ஜெர்மனியை விட பணவீக்கத்தை சிறப்பாக கையாண்ட இந்தியா.. ரிசர்வ் வங்கி புகழாரம்!

Latest News