5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

DA Hike : தமிழக அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு.. முதல்வருக்கு எழுந்த கோரிக்கை!

Request | சமீபத்தில் கூட மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. மார்ச் மாதத்தில் உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி, ஜனவரி மாதத்தில் இருந்து பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

DA Hike : தமிழக அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு.. முதல்வருக்கு எழுந்த கோரிக்கை!
கோப்பு புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 18 Oct 2024 11:55 AM

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வை எதிர்ப்பார்த்து அரசு ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை போலவே  தமிழக அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க : Post Office Scheme : 8.2% வட்டி.. மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்!

ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் அகவிலைப்படி

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதாவது ஆண்டுக்கு முதல் முறை ஜனவரி மாதத்திலும், பிறகு 6 மாதங்கள் கழித்து இரண்டாவதாக ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி உயர்த்தப்படும். அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அது நடைமுறைப்படுத்தப்படும். பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை போலவே பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு 2 முறை டிஆர் உயர்த்தப்படும்.

இதையும் படிங்க : Meesho : ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீஷோ.. 9 நாட்கள் விடுமுறை அளித்து அசத்தல்.. ஏன் தெரியுமா?

கடைசியாக 4% உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு

சமீபத்தில் கூட மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. மார்ச் மாதத்தில் உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி, ஜனவரி மாதத்தில் இருந்து பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, தற்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து சுமார் 50% அகவிலைப்படியாக பெறுகின்றனர். இதேபோல ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியத்தில் இருந்து 50% டிஆர் ஆக பெறுகின்றனர்.

இதையும் படிங்க : Share Market : சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

இந்த நிதி ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது வரும் என அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி போனஸ் உடன் அகவிலைப்படி உயர்வும் சேர்த்து அறிவிக்கப்படலாம் என ஊழியர்கள் எதிப்பார்த்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அக்டோபர் மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் சேர்த்து வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க : SBI : எஸ்.பி.ஐ வழங்கும் 5 சிறப்பு FD திட்டங்கள்.. வட்டி எவ்வளவு தெரியுமா?.. முழு விவரம் இதோ!’

அகவிலைப்படி உயர்வை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் தமிழக அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து முதல்வருக்கு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார், கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சிறப்பு கால முறை ஊதிய பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை 53 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

இதையும் படிங்க : SBI Amrit Vrishti : எஸ்.பி.ஐ வழங்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம்.. வட்டி மட்டும் 7.75%.. அம்ரித் விருஷ்டி குறித்த முழு விவரம் இதோ!

இந்த நிலுவை தொகை விரைவாக கிடைத்தால் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட பயனுள்ளதாக இருக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாக நிலையில், அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Latest News