Farmer Loan : விவசாயிகளுக்கான உத்தரவாதம் இல்லா வங்கி கடன்.. ரூ.2 லட்சமாக உயர்த்தி அறிவித்த ஆர்பிஐ!
Reserve Bank of India | இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் இந்த உத்தரவாதம் இல்லா வங்கி கடன் மூலம் பயன்பெற்று வரும் நிலையில், அந்த வங்கி கடனுக்கான தொகையை ரிசர்வ் வங்கி உயர்த்தி அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி விவசாயிகளுக்கு வழங்கப்படும் உத்திரவாதம் இல்லா வங்கி கடனின் தொகையை அதிரடியாக உயர்த்தி உள்ளது. முன்னதாக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த உத்திரவாதம் இல்லா வங்கி கடன் தொகை ரூபாய் 1.6 லட்சமாக இருந்த நிலையில் தற்போது இரண்டு லட்சங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றம் வரும் ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முக்கிய அறிவிப்பு காரணமாக, விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், விவசாயிகளுக்கான இந்த உத்தரவாதம் இல்லா வங்கி கடன் என்றால் என்ன என்றும், அது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : RBI : 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்ட ரிசர்வர் வங்கி.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
விவசாயிகளுக்கான உத்தரவாதம் இல்லா வங்கி கடன்
இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த நிலையில் உள்ளனர். மாறிவரும் பருவநிலை, காலநிலை, விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, மூல பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் அவ்வப்போது கடும் நிதி நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு நிதி சிக்கல்கள் அல்லது நிதி நெருக்கடிகள் ஏற்படும்போது, அவற்றில் இருந்து மீல்வதற்காகவும், விவசாயத்தில் முதலீடு செய்வதற்காகவும் விவசாயிகள் வங்கி கடன்களை பெறுகின்றனர். இந்த நிலையில், விவசாயிகளுக்கு நம்னை செய்யும் வகையில், அரசு உத்தரவாதம் இல்லா வங்கி கடன்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில்தான், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த உத்தரவாதம் இல்லா வங்கி கடன் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : PF Claim : உங்கள் பிஎஃப் க்ளெய்ம் நிராகரிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் இந்த உத்தரவாதம் இல்லா வங்கி கடன் மூலம் பயன்பெற்று வரும் நிலையில், அந்த வங்கி கடனுக்கான தொகையை ரிசர்வ் வங்கி உயர்த்தி அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் விவசாயிகளின் கடன் அணுகலை மேம்படுத்தும் வகையிலும், அதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு இந்தியாவில் உள்ள 86 சதவீத சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Ration Card : புதிய ரேஷன் கார்டு.. சுமார் 1.28 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு.. ஏன் தெரியுமா?
திட்டம் குறித்த வேறு சில சிறப்பு அம்சங்கள் என்ன?
ஆர்பிஐ-ன் இந்த நடவடிக்கை கிசான் கிரெடிட் கார்டு கடன்களை எளிதாக அணுகுவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 4 சதவீத வட்டியுடன் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பு, விவசாயத்தில் அதிக முதலீட்டையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த உதவும் என்று கூறபப்டுவது குறிப்பிடத்தக்கது.