RBI : 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்ட ரிசர்வர் வங்கி.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
500 Rupees | போலி ரூபாய் நோட்டுக்களின் காரணமாக தான் முன்பு நடைமுறையில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் ரத்து செய்யப்பட்டன. அதவாது சரியாக, நவம்பர் 8, 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இரவோடு இரவாக ரத்து செய்யப்பட்டன.
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதாவது, ரூபாய் 2000, ரூபாய் 500, ரூபாய் 200, ரூபாய் 50, ரூபாய் 20 மற்றும் ரூபாய் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இதில், தற்போது 500 ரூபாய் நோட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 2000 ரூபாய் நோட்டுகளை விடவும் 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவு புழக்கத்தில் உள்ளன. இந்த அதிக புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டில் சில சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, போலி 500 ரூபாய் நோட்டுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மோசடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுகள் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : HDFC : FD திட்டங்களின் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி.. எவ்வளவு தெரியுமா?
ரத்து செய்யப்பட்ட பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்
போலி ரூபாய் நோட்டுக்களின் காரணமாக தான் முன்பு நடைமுறையில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் ரத்து செய்யப்பட்டன. அதவாது சரியாக, நவம்பர் 8, 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இரவோடு இரவாக ரத்து செய்யப்பட்டன. தற்போது அதே பிரச்னை மீண்டும் தலையெடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் முன்பு பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்ததை போலவே தற்போது புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளிலும் போலி நோட்டுக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே தான், இந்திய ரிசர்வ் வங்கி இந்த சில முக்கிய வழிமுறைகளை வகுத்துள்ளது.
இதையும் படிங்க : PF Claim : உங்கள் பிஎஃப் க்ளெய்ம் நிராகரிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய வழிமுறைகள் என்ன?
போலி ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையங்கள் மூலமும் பொதுமக்களை சென்று சேரும் அபாயம் உள்ளது. எனவே ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
- புதிய 500 ரூபாய் நோட்டுக்களில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் இருக்கும்.
- செங்கோட்டை புகைப்படம் ரூபாய் நோட்டின் பின்புறத்தில் பதியப்பட்டிருக்கும்.
- இந்த புதிய ரூபாய் நோட்டுக்கள் ஸ்டோன் கிரே நிறத்தில் இருக்கும்.
- 500 ரூபாய் நோட்டின் அளவு 63*150 மிமி ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Recurring Deposit : மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.1 லட்சம் பெறலாம்.. SBI-ன் அசத்தல் திட்டம்!
போலி ரூபாய் நோட்டுக்களை கண்டுபிடிப்பது எப்படி?
இந்த புதிய 500 ரூபாய் நோட்டு ஒளி ஊடுருவக்கூடியது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் புகைப்படம் வலது பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் என்றும், நீங்கள் இந்த புதிய 500 ரூபாட் நோட்டை மடக்கினால் ஆர்பிஐ-ன் சில எழுத்தக்கள் அதில் தெரியும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த வழிமுறைகளை வைத்து போலி 500 ரூபாய் நோட்டுக்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். இதன் காரணமாகவே, இந்த முக்கிய தகவல்களை பொதுமக்களின் நலனுக்காக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.