5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

RBI : நிலையான வைப்புநிதி திட்டத்தில் இந்த தொகைக்கு மேல் முதலீடு செய்யாதீர்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Fixed Deposit | ஒவ்வொரு வங்கிகளும் வெவ்வேறு கால அளவீடுகளை கொண்ட நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த திட்டங்களுக்கு ஏற்ப வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக சிறந்த நிலையான வைப்புநிதி திட்டங்களை தேர்ந்தெடுத்து மக்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

RBI : நிலையான வைப்புநிதி திட்டத்தில் இந்த தொகைக்கு மேல் முதலீடு செய்யாதீர்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 07 Nov 2024 17:31 PM

FD எனப்படுவது பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் செயல்படுத்தப்படும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். குறிப்பாக இந்த நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். நிலையான வைப்புநிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு சிறந்த வட்டி வழங்கப்படுவதால், அவர்கள் முதலீடு செய்ய இது மிக சிறந்த திட்டமாக இருக்கும். ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு விதமான நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இதையும் படிங்க : Post Office RD : ரூ.7,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.4,99,564 பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

நிலையான வைப்புநிதி திட்டம்

அதாவது ஒவ்வொரு வங்கிகளும் வெவ்வேறு கால அளவீடுகளை கொண்ட நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த திட்டங்களுக்கு ஏற்ப வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக சிறந்த நிலையான வைப்புநிதி திட்டங்களை தேர்ந்தெடுத்து மக்கள் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நிலையான வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அளவை நிர்ணயித்துள்ளது.

ரிசர்வ வங்கி கூறுவது என்ன?

தற்போதைய காலக்கட்டத்தில் ரூ.2 கோடி வரையிலான நிலையான வைப்புநிதி திட்டங்கள் மொத்த பிக்செட்களாக கருதப்படுகின்றன. இந்த நிலையில், இந்த நிலையான வைப்புநிதி முதலீடு செய்வது குறித்து ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : FD Interest Rate : டாப் 5 நிலையான வைப்புநிதி திட்டங்கள்.. 5 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும வங்கிகள்!

வரம்பு தொகை நிர்ணயம்

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பு, நிலையான வைப்புநிதி மூலம் அதிக அளவு பணப்புழக்கத்தை அணுகக்கூடிய HNI-க்கள் மீது வங்கிகள் கவனம் செலுத்த இது அனுமதிக்கிறது. அதுமட்டுமன்றி திறமையான சேவைகளை வழங்கவும் உதவுகிறது. அதன்படி, மொத்த வைப்பு வரம்பை, SCB-க்கள் மற்றும் SF-க்களுக்கான மொத்த வைப்புத்தொகையின் வரம்பை ரூ.3 கோடியாக நிர்ணயித்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட வரம்பு

அதற்கு மேல் உள்ள டெபாசிட் தொகை டெர்ம் டெபாசிட் என மாற்றியமைக்கப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளது. இதேபோல உள்ளுர் பகுதி வங்கிகளுக்கான மொத்த வைப்புத்தொகையின் வரம்பு ரூ.1 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் செய்யபப்டும் முதலீடுகள் ஒற்றை ரூபாய் கால வைப்புத்தொகை என வரையறுக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : MIS : எந்தவித உழைப்பும் இன்றி மாதம் ரூ.5,500 வருமானம்.. அசத்தல் அம்சங்களை வழங்கும் மாத வருமான திட்டம்!

வருமான வரி

ரிசர்வ் வங்கியின் இந்த சமீபத்திய அறிவிப்பு பல முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, வங்கிகளில் ஒரே நேரத்தில் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை முதலீடு செய்பவர்கள், ரூ.3 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நபர்களை விடவும் குறைந்த வட்டி விகிதத்தை பெறுவார்கள். வங்கிகளின் பணப்புழக்கத்திற்கு மொத்த வைப்புகளும் முக்கிய கரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், அதிகபட்ச வரம்பை உயர்த்துவதன் மூலம் வங்கி அமைப்பில் பெரிய முதலீடுகளை ஊக்குவிப்பதே ரிசர்வ் வங்கியின் முக்கியமான நோக்கமாக உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Latest News