5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rules Changing From June 1 : ஆதார் கார்டு டூ ஓட்டுநர் உரிமம் வரை.. ஜூன் 1 முதல் புது ரூல்ஸ்.. நோட் பண்ணிக்கோங்க!

ஒவ்வொரு மாதமும் நிதி சார்ந்த நிறைய விதிமுறைகளில் மாற்றங்கள் வருவது வழக்கமான ஒன்று. இந்த மாற்றங்கள் சாமானியர்களின் மாத சம்பளத்தை பாதிக்கவும் செய்யலாம். அதற்கு ஏற்றவாரு ஒவ்வொரு மாதமும் உங்களது மாத பட்ஜெட் சரி செய்து கொள்வதற்கு என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன்படி, சாமானியர்களை நேரடியாக பாதிக்கும் சிலிண்டர் விலை முதல் ஓட்டுநர் உரிமம்  வரை விதிமுறைகளில் ஜூன் 1ஆம் முதல் மாற்றங்கள் வர உள்ளது.  அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Rules Changing From June 1 : ஆதார் கார்டு டூ ஓட்டுநர் உரிமம் வரை.. ஜூன் 1 முதல் புது ரூல்ஸ்.. நோட் பண்ணிக்கோங்க!
சிலிண்டர் – ஆதார் கார்டு
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 May 2024 14:32 PM

ஜூன் 1 முதல் புது ரூல்ஸ்: ஜூன் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ள, சில விவரங்களை இதில் பார்க்கலாம். 2024ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிய உள்ளன. ஒவ்வொரு மாதமும் நிதி சார்ந்த நிறைய விதிமுறைகளில் மாற்றங்கள் வருவது வழக்கமான ஒன்று. இந்த மாற்றங்கள் சாமானியர்களின் மாத சம்பளத்தை பாதிக்கவும் செய்யலாம். அதற்கு ஏற்றவாரு ஒவ்வொரு மாதமும் உங்களது மாத பட்ஜெட் சரி செய்து கொள்வதற்கு என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன்படி, சாமானியர்களை நேரடியாக பாதிக்கும் சிலிண்டர் விலை முதல் ஓட்டுநர் உரிமம்  வரை விதிமுறைகளில் ஜூன் 1ஆம் முதல் மாற்றங்கள் வர உள்ளது.  அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் காலையில் விலை மாற்றம் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி காலை ஏரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம்.

Also Read: மாதம் ரூ. 5,000க்கு மேல் வட்டி… பணத்தை சேமிக்க போஸ்ட் ஆபிஸ் வழங்கும் பக்காவான முதலீட்டு திட்டம்!

ஆதார் அட்டை புதுப்பித்தல்:

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை தற்போது தவிர்க்க முடியாது ஒன்றாக மாறியுள்ளது. ஆதார் அட்டையை பதிவு செய்த நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், ஆதார் அட்டைகளை இலவசமாக புதுப்பிக்கும் வசதியையும் ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி முடிவடைகிறது. எனவே, அதற்குள் ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம், மொபைல் எண், இமெயில் போன்றவற்றை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் புதுப்பித்து கொள்ளலாம்.  இல்லையென்றால் ஒவ்வொரு திருத்ததிற்கும் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

ஓட்டுநர் உரிமத்தில் மாற்றம்:

ஜூன் 1ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சில மாற்றங்களை மத்திய அரசின் சாலைகள் மற்றும் நெஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை தெரிவித்து, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முறையையும் எளிதாக்குகிறது. அதாவது, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஜூன் 1ஆம் தேதி முதல் ஆர்டிஓவிடம் சென்று தேர்வு எழுத தேவையில்லை. அதற்கு பதிலாக, தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இனி ஓட்டுநர் திறன் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மைனர் வாகனம் ஓட்டினால் அபராதம்:

ஜூன் 1ஆம் தேதி முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மைனர் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். அதேபோல, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2000 விதிக்கப்பட உள்ளது.

Also Read: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு இவ்வளவா?

Latest News