Fixed Deposit : SBI-ன் 444 நாட்களுக்கான FD Vs ICICI-ன் 15 மாதங்களுக்கான FD.. அதிக லாபம் வழங்கும் திட்டம் எது?
Saving Scheme | பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் ஆகும்.
பொதுமக்களின் பாதுகாப்பான எதுர்காலம் மற்றும் நிதி பற்றாக்குறை சமாளிக்கும் விதமாக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், எந்த திட்டங்களில் முதலீடு செய்வது, எந்த திட்டம் அதிக லாபம் தரும் என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளது. இந்த நிலையில், எஸ்பிஐ வங்கியின் 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டம் மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் 15 மாதங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டம் ஆகியவற்றில் எது சிறப்பானது, எந்த திட்டத்தில் முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும் என விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : UPI Payment : இனிமேல் இதை செய்ய UPI பேமண்ட் கட்டாயம்.. செபி கொண்டுவந்த புதிய விதிகள்.. நவம்பர் 1 முதல் அமல்!
எஸ்பிஐ 444 FD Vs ஐசிஐசிஐ 15 மாதங்களுக்கான FD
சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். இந்த நிலையில், ஸ்பிஐ வங்கியின் 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டம் மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் 15 மாதங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டம் ஆகியவற்றில் எந்த திட்டம் சிறந்தது என பார்ப்போம்.
இதையும் படிங்க : Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!
எஸ்பிஐ வங்கியின் 444 நாட்களுக்கான FD
எஸ்பிஐ வங்கி அதிக வட்டி வுகிதத்துடன் கூடிய 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல எஸ்பிஐ-ன் இந்த 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : EPFO : PF உறுப்பினர்களுக்கு முக்கியச் செய்தி.. EPF பணத்தை எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விவரம் இதோ!
ஐசிஐசிஐ வங்கியின் 15 மாதங்களுக்கான FD
ஐசிஐசிஐ வங்கி அதிக வட்டி விகிதத்துடன் கூடியு 15 மாதங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல ஐசிஐசிஐ வங்கியின் இந்த 15 மாதங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.80 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!
எஸ்பிஐ-ன் 444 நாட்களுக்கான FD திட்டம் வழங்கும் லாபம்
எஸ்பிஐ வங்கியின் 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.10,97,870-முதிர்வு தொகையாக கிடைக்கும். இந்த திட்டத்தில் வட்டி மட்டுமே ரூ.97.870.42 கிடைக்கும்.
ஐசிஐசிஐ வங்கியின் 15 மாதங்களுக்கான FD திட்டம் வழங்கும் லாபம்
ஐசிஐசிஐ வங்கியின் இந்த 15 மாதங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ. 10,93,970 முதிர்வு தொகையாக கிடைக்கும். இந்த திட்டத்தில் வட்டி மட்டுமே ரூ.93.970.24 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Fixed Deposit : 7.75% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் ஆக்சிஸ் வங்கியின் FD திட்டங்கள்!
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.