5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

எஸ்.பி.ஐ லோன்கள் இனி காஸ்ட்லி.. எம்.சி.எல்.ஆர் மீண்டும் அதிகரிப்பு: என்ன காரணம்?

SBI Hikes MCLR: எஸ்.பி.ஐ வங்கியில், ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் 0.05 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விகிதம் இன்று (நவ.15, 2024) முதல் அமலுக்கு வருகிறது.

எஸ்.பி.ஐ லோன்கள் இனி காஸ்ட்லி.. எம்.சி.எல்.ஆர் மீண்டும் அதிகரிப்பு: என்ன காரணம்?
எஸ்.பி.ஐ வங்கி
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 15 Nov 2024 12:29 PM

SBI Hikes MCLR: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (எம்சிஎல்ஆர்) 5 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது. இதனால், எஸ்.பி.ஐ கடன்கள் இன்று முதல் அதிகரிக்கக் கூடும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படும்.

எம்.சி.எல்.ஆர் உயர்வுக்கு என்ன காரணம்?

இது குறித்து எஸ்.பி.ஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில், “எம்.சி.எல்.ஆர் விகிதங்கள் 0.05 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விகிதம் இன்று (நவ.15, 2024) முதல் அமலுக்கு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ வங்கி இந்த ஆண்டில் இரண்டு முறை எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு எஸ்.பி.ஐ உயர் வட்டி விகிதங்களை வழங்கிவரும் நிலையிலும், அதிகரிப்பு பொறுப்பு மற்றும் செலவினங்களை கருத்தில் கொண்டும் இந்த உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஏன் இந்த மாறுபாடு?

எஸ்.பி.ஐ, வாடிக்கையாளர்களின் சில தவணைக் காலங்களில் நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் (எம்சிஎல்ஆர்) விளிம்புச் செலவை 5 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கியுள்ள போதிலும், ரிசர்வ் வங்கியும் 2025 ஆம் ஆண்டில் முக்கிய ரெப்போ விகிதத்தை குறைக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இதையும் படிங்க : Post Office FD : அஞ்சலக FD திட்டம்.. ரூ.5,000, ரூ,10,000 மற்றும் ரூ.15,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

ஃபிக்ஸட் டெபாசிட் புதிய உச்சம்

இது குறித்து எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் சி எஸ் செட்டி, “வங்கியின் கடன் புத்தகத்தில் 42 சதவீதம் எம்சிஎல்ஆருடன் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை வெளிப்புற அளவுகோல் அடிப்படையிலானவை. மேலும், டெபாசிட் விகிதங்கள் புதிய உச்சம் தொட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐ மூன்று மற்றும் ஆறு மாத தவணைக்காலங்களில் எம்சிஎல்ஆரை உயர்த்தியுள்ளது. பொதுவாக, வங்கி ஒரு மாதம், இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு தவணைகளில் இந்த எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதங்களை பராமரிக்கிறது.

பியூஸ் கோயல் பேட்டி

முன்னதாக, நேற்று (நவ.14) மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நிச்சயமாக வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பணவீக்கம் குறைவாக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் இருந்து இது குறைவான பணவீக்கம் ஆகும்” என்றார்.

ஆர்பிஐ நிதிக் குழு கூட்டம்

இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் குழு கூட்டம், கவர்னர் சக்தி கந்த தாஸ் தலைமையில் வருகிற டிச. 4-6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

ரெப்போ ரேட் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி ஏதேனும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் விகிதமாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பணவியல் அதிகாரிகளால் ரெப்போ விகிதம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதம் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஓராண்டில் 56% ரிட்டன்.. இந்த மியூச்சுவல் ஃபண்டை நோட் பண்ணுங்க!

Latest News