Term Deposit : டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை வாரி வழங்கும் SBI.. முழு விவரம் இதோ! - Tamil News | SBI offers highest interest rate for Term Deposit schemes | TV9 Tamil

Term Deposit : டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை வாரி வழங்கும் SBI.. முழு விவரம் இதோ!

Published: 

23 Nov 2024 17:14 PM

Interest Rate | டெர்ம் டெபாசிட் திட்டம் வங்கிகள் மட்டுமன்றி அஞ்சலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டியும் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், டெர்ம் டெபாசிட் திட்டத்திற்கு எஸ்பிஐ வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம். 

1 / 6டெர்ம்

டெர்ம் டெபாசிட் என்பது ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் பயனர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தொகையை முதலீடு செய்வர். அவ்வாறு முதலீடு செய்யும் காலத்திற்கு வட்டி வழங்கப்படும். இதுதான் டெர்ம் டெபாசிட் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

2 / 6

இந்த திட்டம் வங்கிகள் மட்டுமன்றி அஞ்சலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டியும் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், டெர்ம் டெபாசிட் திட்டத்திற்கு எஸ்பிஐ வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம். 

3 / 6

1 முதல் 2 ஆண்டுக்கான டெர்ம் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு எஸ்பிஐ வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல, மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வங்கி 7.50 சதவீதம் வட்டி வழங்குகிறது. 

4 / 6

2 முதல் 3 ஆண்டுகளுக்கான டெர்ம் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு எஸ்பிஐ வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல, மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வங்கி 7.50 சதவீதம் வட்டி வழங்குகிறது. 

5 / 6

3 முதல் 5 ஆண்டுகளுக்கான டெர்ம் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு எஸ்பிஐ வங்கி 6.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இதேபோல, மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குகிறது. 

6 / 6

5 முதல் 10 ஆண்டுகளுக்கான டெர்ம் டெபாசிட் திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு எஸ்பிஐ வங்கி 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல, மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வங்கி 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது. 

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?