SBI : எஸ்பிஐ வழங்கும் “Green Rupee Term Deposit”.. வட்டி மட்டும் சிறப்பு அம்சங்கள் என்ன?

Fixed Deposit | கிரீன் ரூபி டெர்ம் டெபாசிட் திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கி பல்வேறு கால அளவீடுகளை கொண்ட முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூன்று சிறப்பு திட்டங்களை செயபடுத்தி வருகிறது. அவை 1111 நாட்களுக்கான FD, 1777 நாட்களுக்கான FD மற்றும் 2222 நாட்களுக்கான FDக்கள் ஆகும். 

SBI : எஸ்பிஐ வழங்கும் Green Rupee Term Deposit.. வட்டி மட்டும் சிறப்பு அம்சங்கள் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 Oct 2024 16:04 PM

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இத்தகைய திட்டங்களில் ஒன்றான கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் திட்டத்தைதான் எஸ்.பி.ஐ வங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் என்றால் என்ன, அதில் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எஸ்பிஐ-ன் கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் என்றால் என்ன?

எஸ்பிஐ வங்கியின் இந்த கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பசுமை திட்டங்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : FD Interest Rate : 2 முதல் 5 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

எஸ்பிஐ வழங்கும் கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் திட்டங்கள்

கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கி பல்வேறு கால அளவீடுகளை கொண்ட முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூன்று சிறப்பு திட்டங்களை செயபடுத்தி வருகிறது. அவை 1111 நாட்களுக்கான FD, 1777 நாட்களுக்கான FD மற்றும் 2222 நாட்களுக்கான FDக்கள் ஆகும்.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

எஸ்பிஐ வழங்கும் கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கான பொது குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள்!

எஸ்பிஐ வங்கியின் சிறப்பு திட்டமான கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, சில்லறை வகையில் 1111 மற்றும் 1777 நாட்களுக்கான FD திட்டங்களுக்கு பொது குடிமக்களுக்கு 6.65% வரை வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல 2222 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 6.15% வரை வட்டி வழங்கப்படுகிறது. மொத்த வகையில் 1111 மற்றும் ற்றும் 1777 நாட்களுக்கான FD திட்டங்களுக்கு பொது குடிமக்களுக்கு சுமார் 6.40% வரை வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல 2222 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 6.15% வரை வட்டி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Flipkart : 1 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி.. பிளிப்கார்ட் அதிரடி சலுகை.. ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் மக்கள்!

எஸ்பிஐ வழங்கும் கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கான மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள்!

எஸ்பிஐ வங்கியின் சிறப்பு திட்டமான கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு சிறந்த வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, சில்லறை வகையில் 1111 மற்றும் 1777 நாட்களுக்கான FD திட்டங்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 7.15% வரை வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல 2222 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 7.40% வரை வட்டி வழங்கப்படுகிறது. மொத்த வகையில் 1111 மற்றும் ற்றும் 1777 நாட்களுக்கான FD திட்டங்களுக்கு மூத்த குடிமக்களுக்கு சுமார் 6.90% வரை வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல 2222 நாட்களுக்கான FD திட்டத்திற்கு 6.65% வரை வட்டி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?

எவ்வளவு முதலீடு செய்யலாம்

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!