Amrit Kalash Scheme : அதிக வட்டி வழங்கும் SBI-ன் அம்ரித் கலாஷ் திட்டம்.. முதலீடு செய்ய காலக்கெடு நீட்டிப்பு! - Tamil News | SBI providing highest interest rate for Amrit Kalash scheme | TV9 Tamil

Amrit Kalash Scheme : அதிக வட்டி வழங்கும் SBI-ன் அம்ரித் கலாஷ் திட்டம்.. முதலீடு செய்ய காலக்கெடு நீட்டிப்பு!

Date extended | சிறந்த வட்டியுடன் கூடிய இந்த எஸ்.பி.ஐ வங்கியின் சிறப்பு திட்டத்தில் முதலீடு செப்டம்பர் 2024 கடை தேதியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்.பி.ஐ இந்த சிறப்பு திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

Amrit Kalash Scheme : அதிக வட்டி வழங்கும் SBI-ன் அம்ரித் கலாஷ் திட்டம்.. முதலீடு செய்ய காலக்கெடு நீட்டிப்பு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

14 Oct 2024 14:05 PM

எஸ்.பி.ஐ வங்கி அம்ரித் கலாஷ் என்று அழைக்கப்படும் தனது சிறந்த நிலையான வைப்புநிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறாது. இந்த திட்டத்தின் காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதாவது, கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அம்ரித் கலாஷ் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன, எதற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : MSSC : 7.5% வட்டி.. பெண்களுக்கான சிறந்த சிறு சேமிப்பு திட்டம்.. முதலீடு செய்வது எப்படி.. முழு விவரம் இதோ!

அம்ரித் கலஷ் நிலையான வைப்புநிதி திட்டம்

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், அம்ரித் கலாஷ் திட்டத்தில் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி சிறந்த வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : Indian Billionaire : $1.1 ட்ரில்லியனை தாண்டிய இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு.. மாஸ் காட்டும் தொழிலதிபர்கள்!

காலக்கெடுவை நீட்டித்த எஸ்.பி.ஐ வங்கி

சிறந்த வட்டியுடன் கூடிய இந்த எஸ்.பி.ஐ வங்கியின் சிறப்பு திட்டத்தில் முதலீடு செய்ய செப்டம்பர் 30, 2024 கடை தேதியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்.பி.ஐ, இந்த சிறப்பு திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதன்படி, அம்ரித் கலாஷ் திட்டத்தில் முதலீடு செய்ய மார்ச் 31, 2025 ஆக அறிவித்துள்ளது. அம்ரித் கலாஷ் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 6.80% வரை வட்டி வழங்குகிறது. இதேபோல பொது குடிமக்களுக்கு 7.75% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு எஸ்.பி.ஐ வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Aadhaar Renewal : இன்னும் 2 மாதங்கள் மட்டும்தான் அவகாசம்.. அதுக்குள்ள ஆதார் கார்டுல இத பண்ணலனா சிக்கல்!

பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் FD வட்டி விகிதம்

பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 7.25% வரை வட்டி வழங்குகிறது.

பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 1 ஆண்டு FD வட்டி விகிதம் : பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 1 ஆண்டு நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 6.80% வரை வட்டி வழங்குகிறது.

பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 3 ஆண்டுகளுக்கான FD வட்டி விகிதம் : பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 6.75% வரை வட்டி வழங்குகிறது.

பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 5 ஆண்டுகளுக்கான FD வட்டி விகிதம் : பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 6.50% வரை வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : Forbes 2024 : ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024.. முதல் இடத்தில் முகேஷ் அம்பானி.. 2வது இடத்தில் இருப்பது யார்?

மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் FD வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 7.75% வரை வட்டி வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 1 ஆண்டு FD வட்டி விகிதம் : மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 1 ஆண்டு நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 7.30% வரை வட்டி வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 3 ஆண்டுகளுக்கான FD வட்டி விகிதம் : மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 7.25% வரை வட்டி வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 5 ஆண்டுகளுக்கான FD வட்டி விகிதம் : மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 7.50% வரை வட்டி வழங்குகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!