5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : எஸ்பிஐ Vs செண்ட்ரல் பேங்க்.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கி எது?

Interest Rate | எந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது அதிக லாபம் தரும் என்ற தெளிவு இல்லாமல் மக்கள் குழம்புகின்றனர். இதன் காரணமாக அதிக வட்டி வழங்கப்படும் எஸ்பிஐ மற்றும் செண்ட்ரல் வங்கிகள் வழங்கும் இரண்டு சேமிப்பு திட்டங்களில் எந்த சேமிப்பு திட்டத்தில் அதிக லாபம் வழங்கப்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம். 

Fixed Deposit : எஸ்பிஐ Vs செண்ட்ரல் பேங்க்.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கி எது?
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 25 Oct 2024 18:04 PM

தற்போது பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதுமட்டுமன்றி, அரசும் அஞ்சலகங்கள் மூலம் நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், எந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது அதிக லாபம் தரும் என்ற தெளிவு இல்லாமல் மக்கள் குழம்புகின்றனர். இதன் காரணமாக அதிக வட்டி வழங்கப்படும் எஸ்பிஐ மற்றும் செண்ட்ரல் வங்கிகள் வழங்கும் இரண்டு சேமிப்பு திட்டங்களில் எந்த சேமிப்பு திட்டத்தில் அதிக லாபம் வழங்கப்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : MSSC Scheme : பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கும் FD திட்டங்கள்

மனிதர்களின் வாழ்வில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நிலையான பொருளாதாரம், பாதுகாப்பான எதிர்காலம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். அந்த வகையில் பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான்  FD எனப்படும் நிலையான சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட காலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம். இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை வழங்குகிறது. எனவே மூத்த குடிமக்கள் சேமிக்க இது ஒரு சிறந்த திட்டமாகும்.

இதையும் படிங்க : Fixed Deposit : 9.50% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

எஸ்பிஐ வங்கியின் 444 நாட்களுக்கான FD

எஸ்பிஐ வங்கி அதிக வட்டி வுகிதத்துடன் கூடிய அம்ரித் விரிஷ்டி என்ற 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல எஸ்பிஐ வங்கியின் இந்த 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு சுமார் 7.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

எஸ்பிஐ-ன் அம்ரித் விரிஷ்டி FD திட்டம் வழங்கும் லாபம்

எஸ்பிஐ வங்கியின் 444 நாட்களுக்கான, அம்ரித் விரிஷ்டி நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தின் முடிவில் உங்களுக்கு மொத்தம் ரூ.10,97,870-முதிர்வு தொகையாக கிடைக்கும். அதன்படி, இந்த திட்டத்தில் வட்டி மட்டுமே ரூ.97.870.42 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

செண்ட்ரல் வங்கியின் 444 நாட்களுக்கான் FD திட்டம்

செண்ட்ரல் வங்கி அதிக வட்டி வுகிதத்துடன் கூடிய 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.45 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல செண்ட்ரல் வங்கியின் இந்த 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு சுமார் 7.95 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒருவர் ரூ.10,000 முதல் ரூ.10 கோடி வரை முதலீடு செய்யலாம்.

 செண்ட்ரல் வங்கியின் 444 நாட்களுக்கான FD திட்டம் வழங்கும் லாபம்

செண்ட்ரல் வங்கியின் 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தின் முடிவில் உங்களுக்கு மொத்தம் ரூ.11,00,493-முதிர்வு தொகையாக கிடைக்கும். அதன்படி, இந்த திட்டத்தில் வட்டி மட்டுமே ரூ.1,00,493 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News