UPI Payment : இனிமேல் இதை செய்ய UPI பேமண்ட் கட்டாயம்.. செபி கொண்டுவந்த புதிய விதிகள்.. நவம்பர் 1 முதல் அமல்!
SEBI New Rules | செபி (SEBI) என சுருக்கமாக அழைக்கப்படும் செக்யூரிட்டிஸ் மற்றும் எக்ஸ்சேன்ஜ் போர்டு ஆஃப் இந்தியா தனது கடன் பத்திரங்களின் பொது வெளியீடுகளுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கும் வகையில் சில புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.
செபி தனது கடன் பத்திரங்களின் பொது வெளியீடுகளுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கும் வகையில் சில புதிய விதிகளையும், சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது. செபியின் இந்த புதிய விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி குறிப்பிட்ட சில சேவைகளுக்கு UPI பேமண்ட் முறையை கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில், செபி அறிமுகம் செய்துள்ள புதிய விதிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Bank Holidays : தீபாவளி தொடர் விடுமுறை.. இந்த 4 நாட்கள் வங்கிகளுக்கு செல்ல திட்டமிடாதீர்கள்!
புதிய விதிகளை அறிமுகம் செய்த செபி
செபி (SEBI) என சுருக்கமாக அழைக்கப்படும் செக்யூரிட்டிஸ் மற்றும் எக்ஸ்சேன்ஜ் போர்டு ஆஃப் இந்தியா தனது கடன் பத்திரங்களின் பொது வெளியீடுகளுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கும் வகையில் சில புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதில் முதன்மையாக, ரூ.5 லட்சம் வரையிலான தொகைகளுக்கு, இடைத்தரகர்கள் மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்கள், ஃபண்ட் பிளாக்கிங் செய்வதற்கு தங்களது UPI சேவையை பயன்படுத்த வேண்டும் என்று செபி கூறியுள்ளது.
இதையும் படிங்க : Aadhaar Service : இனி தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை.. இந்தியா போஸ்ட் அதிரடி அறிவிப்பு!
செபியின் புதிய விதிகள் யார் யாருக்கு கட்டாயமாக இருக்கும்
செபியின் இந்த புதிய விதிகள் சிலருக்கு கட்டாயமாக இருக்கும். குறிப்பாக பங்கு தரகர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள், டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் அல்லது பதிவாளர்கள் உள்ளிட்ட இடைத்தரகர்கள் மூலம், கடன் பத்திரங்களின் பொது வெளியீடுகளுக்கு விண்ணப்பம் செய்யும் முதலீட்டாளர்களுக்கு செபியின் இந்த புதிய விதிகள் மிகவும் கட்டாயமாக பின்பற்றப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!
இவ்வாறு கடன் பத்திரங்களின் பொது வெளியீடுகளுக்கு விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்கள், இடைத்தரகர்களுக்கு சமர்பிக்கப்பட்ட ஏலப் படிவத்தில் தங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட UPI ஐடியை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கால அளவுகளை குறைக்கும் வகையில் புதிய விதிகள்
கடன் பத்திரங்களின் பொது வெளியீடுகளுக்கு விண்ணப்பிப்பதில் மட்டுமன்றி, வழங்குநர்கள் நிதியை அணுக எடுக்கும் நேரத்தை குறைக்கும் விதமாகவும் செபி பல புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, கடன் பத்திரங்களின் பொது வெளியீடுகளுக்கான சந்தா காலம் குறைந்தபட்சமாக வெறும் 3 வேலை நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக விலைப்பட்டியல் அல்லது மகசூல் திருத்தங்களில் ஏலத்தின் கால அளவீட்டை 1 வேலை நாளாக நீடிக்க வழிவகை செய்துள்ளது. முன்னதாக இந்த பணியை செய்ய 3 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 1 நாளாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : EPFO : PF உறுப்பினர்களுக்கு முக்கியச் செய்தி.. EPF பணத்தை எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விவரம் இதோ!
இதேபோல ஏற்கனவே பட்டியலிடப்பட்ட பத்திரங்களை கொண்ட வழங்குநர்களுக்கு, வரைவு சலுகை ஆவணங்களில் பொது கருத்துகளுக்கு அனுமதிக்கப்படும் நேரம் வெறும் 1 நாளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிற வழங்குநர்களுக்கு வரைவு சலுகை ஆவணங்களில் பொது கருத்துகளுக்கு அனுமதிக்கப்படும் நேரம் 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!
செபியின் இந்த புதிய திருத்தப்பட்ட புதிய விதிகள் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.