ட்ரேடிங் பெயரில் நடக்கும் பெரிய மோசடி.. எச்சரிக்கை கொடுத்த செபி.. முழு விவரம்!
Sebi Warning : சில மோசடி திட்டங்கள் மற்றும் தளங்கள் குறித்து முதலீட்டாளர்களுக்கு செபி முன்னரே எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட எச்சரிக்கையில், செபி பதிவு செய்யப்படாத சில அங்கீகரிக்கப்படாத மின்னணு தளங்கள் உள்ளன என்று செபி கூறியுள்ளது.
கேமிங் மற்றும் வர்த்தகம் தொடர்பான பிற சட்டவிரோத முறைகளுக்கு எதிராக முதலீட்டாளர்களை செபி எச்சரித்துள்ளது. இதுபோன்ற திட்டங்களில் முதலீட்டாளர்கள் பங்கேற்கக் கூடாது என்று செபி கூறுகிறது. இதில் முதலீட்டாளர்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால். அல்லது அவர்களுக்கு ஏதேனும் மோசடி நடந்தால் அதற்கு அவர்களே பொறுப்பாவார்கள். இதனுடன், இதுபோன்ற சட்டவிரோத தளங்கள் முதலீட்டாளர்களின் ரகசிய மற்றும் முக்கியமான தரவுகளையும் திருடக்கூடும் என்று செபி கூறியுள்ளது. பங்கு விலைகளுடன் இணைக்கப்பட்ட மெய்நிகர் வர்த்தகம் மற்றும் கேமிங் தளங்கள் குறித்து முதலீட்டாளர்களுக்கு செபி எச்சரிக்கை விடுத்தது, அத்தகைய திட்டங்கள் மற்றும் தளங்கள் SEBI இல் பதிவு செய்யப்படவில்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளது.
அத்தகைய சூழ்நிலையில், யாராவது புகார் கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு செபியின் அமைப்பைப் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக, நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சில ஆப்ஸ் மற்றும் இயங்குதளங்கள் மெய்நிகர் வர்த்தக தளங்கள், காகித வர்த்தகம் மற்றும் ஃபேன்டசி டிரேடிங் கேம்களை வழங்குகின்றன. இது பத்திர ஒப்பந்த (ஒழுங்குமுறை) சட்டம், 1956 மற்றும் செபி சட்டம், 1992 ஆகியவற்றின் மீறலாகும்.
Also Read : SBI வங்கி பெயரில் மோசடி.. தவிர்க்க இந்த 4 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!
செபி எச்சரிக்கை
இது தொடர்பாக செபி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத திட்டங்களில் முதலீட்டாளர்கள் பங்கேற்பது அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில்தான் என்று தெரிவித்துள்ளது. அத்தகைய திட்டம் முதலீட்டாளருக்கு ஏதேனும் இழப்பை ஏற்படுத்தினால், ஏமாற்றப்பட்டால் அல்லது அவரது ரகசியத் தகவல்கள் திருடப்பட்டால், இந்த விஷயத்தில் செபி எந்த உதவியையும் வழங்காது. இத்தகைய திட்டங்கள் மற்றும் தளங்களை ஒழுங்குபடுத்துவது அதன் வேலை அல்ல என்பதால், செபி அவர்கள் மீது எந்த புகாரையும் எடுக்க முடியாது என்று செபி தெளிவுபடுத்தியது.
முன்னரே எச்சரிக்கையும் விடப்பட்டது
இதுபோன்ற திட்டங்கள் மற்றும் தளங்கள் குறித்து முதலீட்டாளர்களுக்கு செபி முன்னரே எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட எச்சரிக்கையில், செபி பதிவு செய்யப்படாத சில அங்கீகரிக்கப்படாத மின்னணு தளங்கள் உள்ளன என்று செபி கூறியுள்ளது. ஆனால், பங்குச் சந்தைகள் போல வேலை செய்து நிதி திரட்டுகிறார்கள். இந்த வேலை முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் அங்கீகரிக்கப்படாதது. அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் மட்டுமே நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய தளத்தை வழங்குகின்றன.