5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மாதம் ரூ.20,000 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

Senior Citizen Saving Scheme | பொதுமக்களின் பாதுகாப்பான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS). இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.20,000 வரை வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

மாதம் ரூ.20,000 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 09 Jul 2024 12:45 PM

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் : இந்தியாவில் மக்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயலப்டுத்தி வருகின்றன. குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தனி கவனம் செலுத்தும் வகையில் அதிக லாபம் உள்ள திட்டங்களை அரசு செயல்படுத்திம் வருகிறது. மூத்த குடிமக்கள் தங்களின் பணி காலம் முடிந்த பிறகு, தங்களது எதிர்காலம் என்னவாகுமோ என்று பயப்படாமல் இருக்க, அரசு ஒரு அசத்தலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதுதான் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS). இந்த திட்டம் முதியவர்களுக்கு நிலையான வருமானத்தை பெற்று தரக்கூடிய சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்குவது மட்டுமன்றி, மாதம் ரூ.20,000 ஊதியம் பெறவும் இந்த திட்டம் உதவுகிறது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் என்றால் என்ன (SCSS)

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்களுக்கான அரசு வழங்கும் சிறந்த சேமிப்பு திட்டமாகும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்குவதின் நோக்கத்தின் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்றவர்கள், மருத்து காரணங்களால் விரும்ப ஓய்வு பெற்ற 55 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட மூத்த குடிமக்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். பாதுகாப்பு துறைகளில் பணியாற்றிவர்கள் கூட 50 வயதிற்கு மேல் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி?

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தை வங்கி அல்லது தபால் நிலையங்களில் தொடங்கலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வைப்பு தொகை ரூ.1,000 முதல் அதிகபட்ச வைப்பு தொகை ரூ.30 லட்சம் வரை இருக்கலாம். மனைமவி உண்டனான இணைப்பு கணக்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், கணக்கை தொடங்கியவரின் பெயரில் தான் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்யப்படும் டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இது மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டமாக அமைகிறது.

இதையும் படிங்க : மாதம் ரூ.40-க்கும் குறைவாக செலுத்தினால் போதும்.. ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் திட்டம்.. முழு விவரம் இதோ!

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒருவேளை திட்டத்தை நீடிக்க விரும்பினால் திட்டம் முதிர்ச்சி அடையும்போது நீடித்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தை முன்கூட்டியே வேண்டுமானாலும் முடித்துக்கொள்ளலாம். ஆனால் அது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News