Senior Citizen Saving Scheme : மூத்த குடிமக்களுக்கான FD-க்கு 8.2% வட்டி.. அசத்தும் அஞ்சலக சேமிப்பு திட்டம்!
Post Office Scheme | பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.
அஞ்சலக சேமிப்பு திட்டம் : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில் மூத்த குடுமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கியை விட சிறந்த வட்டி வழங்கும் திட்டம் ஒன்று உள்ளது. அது என்ன திட்டம், முதலீடு செய்வது எப்படி, எவ்வளவு வட்டி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Unified Pension Scheme: ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் என்றால் என்ன? யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம்!
8.2% வரை வட்டி வழங்கப்படுகிறது
இந்திய அரசு தபால் நிலையங்கள் மூலம் பல்வேறு முதலீடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்களுக்கான அஞ்சலக சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் முதியவர்களுக்கு 8.2% வரை வட்டி வழங்கப்படுகிறது. இது ஒரு நிலையான முதலீட்டு திட்டமாகும். நிதி சிக்கலற்ற எதிர்காலத்தை பெற விரும்பும் முதியவர்களின் சிறந்த தேர்வாக இது உள்ளது.
இதையும் படிங்க : Post Office Scheme : மாதம் ரூ.20,500 வரை வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!
மூத்த குடிமக்களுக்கான அஞ்சலக சேமிப்பு திட்டம் என்றால் என்ன?
எஸ்.சி.எஸ்.எஸ் அதாவது மூத்த குடிமக்களுக்கான அஞ்சல சேமிப்பு திட்டம் தபால் நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்கள் சுமார் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அதன்படி, இந்த திட்டத்தில் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க : Blue Aadhaar Card : ப்ளூ ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய எவ்வளவு செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வழங்கும் வட்டி
தற்போது எஸ்.பி.ஐ-ல் மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.50% வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல 5 ஆண்டுகளுக்கான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 5 முதல் 10 ஆண்டுகளுக்கான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.50% வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.