5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Post Office Scheme : வட்டி மட்டுமே ரூ.20,500.. அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

High Interest Rate | சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும்.

Post Office Scheme : வட்டி மட்டுமே ரூ.20,500.. அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம் (Photo Credit : DEV IMAGES/Moment/Getty Images)
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 11 Sep 2024 18:42 PM

அஞ்சலக சேமிப்பு திட்டம் : பொதுமக்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகை திட்டங்களில் அஞ்சல சேமிப்பு திட்டங்கள் மிகவும் சிறந்ததாக உள்ளன. இந்த நிலையில் இந்த ஒரு அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்களுக்கு மாதம் ரூ.20,000 வட்டி மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அது எந்த சேமிப்பு திட்டம், அதில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் தனியார் துறை வங்கிகள்!

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் என்றால் என்ன?

மத்திய அரசு வழங்க கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம். பொதுமக்கள் தங்கள் ஓய்வு காலத்தை நிதி பிரச்னைகள் இன்றி சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் கழிக்கும் பொருட்டு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிதி பாதுகாப்புடன் கூடிய ஓய்வை பெற விரும்புபவர்கள் தாராளமாக இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். மத்திய அரசின் இந்த சேமிப்பு திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 8.2% வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொருத்து இதை நீங்கள் மாத வருமானமாக பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனவே 60 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயனடையளாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!

SCSS திட்டத்தில் முதலீடு செய்து மாதம் ரூ.20,000 வருமானம் ஈட்டுவது எப்படி?

மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.30 லட்சம் வரை அதிகபட்சமாக முதலீடு செய்யலாம். அவ்வாறு மூத்த குடிமக்கள் செய்யும் முதலீட்டுக்கு ஒரு ஆண்டுக்கு 8.2% வட்டியும் வழங்கப்படும். நீங்கள் ஒருவேளை ரூ.30 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் ரூ. 2 லட்சத்து 46 ஆயிரம் உங்களுக்கு வட்டியாக கிடைக்கும். இந்த வட்டியை மாதாந்திர அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் ஒரு மாதத்திற்கு சராசரியாக ரூ. 20,500 கிடைக்கும். ஓய்வு காலத்தில் நிதி பிரச்னைகள் குறித்த எந்தவித கவலையும் இன்றி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள இந்த திட்டம் மிகவும் உகந்ததாக இருக்கும்.

இதையும் படிங்க : Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 7.55% வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

சேமிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் – ஏன் தெரியுமா?

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் இந்த மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான, நிதி பற்றாக்குறை அற்ற எதிர்காலத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News