Share Market : கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்! - Tamil News | Sensex and Nifty 50 crash made investors lose 9 lakh crore in single day | TV9 Tamil

Share Market : கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

Share Market | கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் இன்று ஒரே நாளில் சுமார் ரூ.9 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.

Share Market : கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

பங்குச்சந்தை

Updated On: 

22 Oct 2024 16:06 PM

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 22) கடும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதேபோல பிஎஸ்இ-ன் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 4 சதவீதம் வரை சரிந்துள்ளன. இதனால் இந்திய பங்குச்சந்தையின் மிட் மற்றும் ஸ்மால்கேப் பிரிவுகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.9 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர்.

இதையும் படிங்க : India’s UPI : மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் UPI சேவை.. பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என நம்பிக்கை!

ஈரான் – இஸ்ரேல் போரால் கடும் பாதிப்பை சந்திக்கும் பங்குச்சந்தை

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதலே ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் மிக கடுமையான தாக்குதல் நடத்தியது. அதாவது ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, இஸ்ரேலை நிலைகுலைய செய்தது. ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை தீவிரமடைய செய்தது.

இதையும் படிங்க : Fixed Deposit : 7.75% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் ஆக்சிஸ் வங்கியின் FD திட்டங்கள்!

ஈரானின் இந்த செயலால் கடும் கோபம் கொண்ட இஸ்ரேல், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. இதனை தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்த ராணுவத்தை திரட்டிய இஸ்ரேல், இரான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இவ்வாறு அங்கு நிலமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்ட சம்பவம் போரின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : FD Interest Rate : 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்.. வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய ஆக்சிஸ் வங்கி!

ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று (அக்டோபர் 22) கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1% குறைந்துள்ளது. இதேபோல BSE-ன் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 4 சதவீதம் வரை சரிந்துள்ளன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது முந்தைய அமர்வில் BSE-ல் பட்டியலிடப்பட்டிருந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.453.7 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.444.7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடையை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Karan Johar : கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்.. 50% பங்குகளை ரூ.1,000 கோடிக்கு வாங்கும் ஆதார் பூனவல்லா!

900 புள்ளிகள் சரிவை சந்தித்த சென்செக்ஸ்

இன்று பங்குச்சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீடுகள் கடுமையாக சரிந்துள்ளன. அதாவது, SP மற்றும் BSE-ன் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. இதெபோல NSE நிஃப்டி50 சுமார் 24,500-க்கும் கீழ் சரிந்து வர்த்தகம் நடைபெற்றது. வர்த்தகம் முடிவடையும் நேரத்தில் சென்செக்ஸ் 930.55 புள்ளிகள் சரிந்து 80,220.72 ஆகவும், நிஃப்டி 309 புள்ளிகள் சரிந்து 24,472 ஆகவும் இருந்தது. இந்த கடுமையான சரிவு இந்திய பங்குச்சந்தை மூலதனத்தில் சுமார் ரூ.9 லட்சம் கோடியை இழக்க செய்தது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் இந்த அறிகுறிகள் உள்ளதா? இதய நோயாக கூட இருக்கலாம்..
சேலையில் சொக்கவைக்கும் பிரியங்கா மோகன்!
மாஸ்டர் பட நடிகை தான் இந்த பாப்பா...
மனிதர்களை தாக்கக்கூடிய பறவைகள் என்னென்ன தெரியுமா?