Share Market : ஒரே வாரத்தில் 4,000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. சுமார் ரூ.16 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. காரணம் என்ன?
Sensex Dropped | இந்த காரணமாக இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு வாரமாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, சென்செக்ஸ் 33.49 புள்ளிகள் சரிந்து 84,266.29 ஆகவும், நிஃப்டி 13.49 புள்ளிகள் சரிந்து 25,796 ஆகவும் இருந்தது.
ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 4,000 புள்ளிகள் சரிந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.16 லட்சம் கோடியை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய பங்குச்சந்தையை கடுமையாக பாதித்துள்ள நிலையில், இதன் கரணம் என்ன, மற்ற பங்குச்சந்தைகளின் நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : PM Kisaan: பிஎம் கிசான் திட்டம்.. உங்க அக்கவுண்டுக்கு ரூ.2000 வந்துதா? வரலனா இதை பண்ணுங்க
தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய பங்குச்சந்தை
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதலே ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் மிக கடுமையான தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி இஸ்ரேலை நிலைகுலைய செய்தது. ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை விரிவடைய செய்துள்ளது. ஈரானின் இந்த செயலால் கடும் கோபம் கொண்டுள்ள இஸ்ரேல், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. இதனை தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்த ராணுவத்தை திரட்டிய இஸ்ரேல், இரான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இவ்வாறு அங்கு நிலமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இந்த போர் ஈரான் – இஸ்ரேலுக்கு மட்டுமன்றி அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் இது உலக பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க : SBI : எஸ்பிஐ வழங்கும் “Green Rupee Term Deposit”.. வட்டி மட்டும் சிறப்பு அம்சங்கள் என்ன?
கடந்த ஒரு வாரமாக கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை
இந்த காரணமாக இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு வாரமாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, சென்செக்ஸ் 33.49 புள்ளிகள் சரிந்து 84,266.29 ஆகவும், நிஃப்டி 13.49 புள்ளிகள் சரிந்து 25,796 ஆகவும் இருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி பங்குச்சந்தைக்கு விடுமுறை அளித்திருந்ததால் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. விடுமுறைக்கு பின்பு கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி சரிவுடன் பங்குச்சந்தை தொடங்கிய நிலையில், சற்று உயர்ந்தது.
இதையும் படிங்க : FD Interest Rate : 2 முதல் 5 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!
அதாவது வர்த்தக தொடக்கத்தில் சுமார் 400 புள்ளிகள் வரை இறங்கியிருந்த சென்செக்ஸ், சில மணி நேரங்களுக்கு பிறகு சுமார் 130 புள்ளிகள் வரை உயர்ந்தது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 82,631 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தொடர் சரிவுக்கு பிறகு பங்குச்சந்தை உயர்ந்ததால், அது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!
2 ஆண்டுகளில் கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை
செப்டம்பர் 27 ஆம் தேதி முதலான இந்திய பங்குச்சந்தை நிலவரப்படி, ஒரு வாரத்தில் இந்திய பங்குச்சந்தை சுமார் 4,148 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ் நிறுவனத்திற்கு (BSE) ரூ.461.26 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் சுமார் ரூ.16 லட்சம் கோடி நஷ்டத்தை முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர். கடந்த ஜூன் 2022 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சரிவு தான், இந்திய பங்குச்சந்தையில் மிக மோசமான சரிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.