Aadhaar Card : செப்டம்பர் 14 ஆம் தேதி தான் கடைசி.. ஆதார் கார்டு குறித்து வெளியான முக்கிய தகவல்! - Tamil News | September 14 is the last date to update Aadhaar card without any fees | TV9 Tamil

Aadhaar Card : செப்டம்பர் 14 ஆம் தேதி தான் கடைசி.. ஆதார் கார்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

Updated On: 

04 Aug 2024 18:42 PM

Data Update | இந்திய குடிமக்களுக்கு தேவையான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. இந்த சூழலில் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது முக்கியமாகும். ஒருவேளை உங்கள் ஆதார் அட்டை விவரங்கள் மற்ற அடையாள அட்டைகளுடன் வேறுபட்டிருந்தால் அது சிக்கலாகிவிடும். எனவே ஆதார் விவரங்களை இலவசமாக திருத்தம் செய்ய அரசு அவகாசம் வழங்கியுள்ளது.

Aadhaar Card : செப்டம்பர் 14 ஆம் தேதி தான் கடைசி.. ஆதார் கார்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

மாதிரி புகைப்படம்

Follow Us On

ஆதார் அட்டை : இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஆதாரமாக விளங்கிறது. பள்ளியில் சேறுவது முதல் மருத்துவனையில் சிகிச்சை பெறுவது வரை, அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்களுக்கு தேவையான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. இந்த சூழலில் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது முக்கியமாகும். ஒருவேளை உங்கள் ஆதார் அட்டை விவரங்கள் மற்ற அடையாள அட்டைகளுடன் வேறுபட்டிருந்தால் அது சிக்கலாகிவிடும். எனவே ஆதார் விவரங்களை இலவசமாக திருத்தம் செய்ய அரசு அவகாசம் வழங்கியுள்ளது. இந்த அவகாசம் விரைவில் முடியப்போகிறது. அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் திருத்தம் செய்யவில்லை என்றால் கட்டணம் செலுத்தி தான் திருத்தம் செய்ய வேண்டும்.

செப்டம்பர் 14 ஆம் தேதி கடைசி நாள்

இந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ள செப்டம்பர் 14 ஆம் தேதி கடைசி தேதியாக உள்ளது. செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் அட்டை அப்டேட் செய்யும் நபர்களுக்கு இலவசமாக அப்டேட் செய்யப்படும். ஆனால் செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு மேல் ஆதார் அட்டையில் எந்த தகவலை அப்டேட் செய்ய வேண்டும்  என்றாலும் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : New Rules : கேஸ் சிலிண்டர் முதல் ஃபாஸ்டேக் வரை.. ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!

ஆதாரில் அப்டேட் செய்ய என்ன செய்ய வேண்டும்

  1. ஆதாரில் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பிறகு, My Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதன் பிறகு ஆதாரை புதுப்பி (Update Aadhaar) என்பதை கிளிக் செய்யவும்.
  4. இதற்கு பிறகு, ஆதார் எண் மற்றும் கேப்சா சரிப்பார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பிறகு Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
  5. அதற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஒடிபியை பயன்படுத்தி உள்நுழையவும்.
  6. அதனை தொடர்ந்து நீங்கள் எந்த விவரங்களை மாற்றம் செய்ய வேண்டுமோ அதை குறிப்பிட்டு அதற்காக ஒரு ஆதாரத்தையும் சமர்பிக்க வேண்டும்.
  7. உங்களது கோரிக்கை ஏற்கப்பட்ட பிறகு, அதனை உறுதி செய்யும் விதமாக உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
  8. அதனை வைத்து உங்கள் கோரிக்கையின் நிலை என்ன அன்பது குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : Aadhaar : ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை மாற்றுவது எப்படி தெரியுமா? விவரம் இதோ!

ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்வது போல ஆப்லைனிலும் செய்யலாம். ஆனால் அதற்கு நீங்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள இ சேவை மையங்களுக்கு சென்றுதான் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version