Share Market : ஈரான் – இஸ்ரேல் மோதல்.. கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை! - Tamil News | Share market dropped again for the 3rd time in this month | TV9 Tamil

Share Market : ஈரான் – இஸ்ரேல் மோதல்.. கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை!

Updated On: 

03 Oct 2024 10:50 AM

Iran - Israel War | கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்து வந்த நிலையில், ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது.

Share Market : ஈரான் - இஸ்ரேல் மோதல்..  கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை!

பங்குச்சந்தை

Follow Us On

கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தையில் எந்தவித பெரிய ஏற்றமும், இறக்கமும் இல்லாமல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி அன்று பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. நேற்று (அக்டோபர் 2 ) காந்தி ஜெயந்தி பொதுவிடுமுறை என்பதால் பங்குச்சந்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஈரான் – இஸ்ரேல் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில் இன்று (அக்டோபர் 3), பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. காலை 9 மணியளவில் சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்துள்ளது.

இதையும் படிங்க : FD Interest Rate : 2 முதல் 5 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய பங்குச்சந்தை

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதலே ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் மிக கடுமையான தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி பயங்கர தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேல் நிலை குலைந்த நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை விரிவடைய செய்துள்ளது. ஈரானின் இந்த செயலால் கடும் கோபம் கொண்டுள்ள இஸ்ரேல், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான் தனது விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. மேலும், இந்தியர்கள் யாரும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும், லெபனானுக்கு ஆதரவாக ரஷ்யாவும் களமிறங்கியுள்ள நிலையில், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

மத்திய கிழக்கு பிரச்னைய்யால் சரிந்த பங்குச்சந்தை

இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்து 83.150 ஆகவும், நிஃப்டி 50 தோறாயமாக 230 புள்ளிகள் வரை குறைந்து 25,550 ஆக உள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பிரச்னையே இந்த கடும் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே நிலவும் இந்த போர் பதற்றத்தின் காரணமாக இந்திய பங்குச்சந்தை மட்டுமன்றி உலகலாவிய பங்குச்சந்தையும் கடும் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Gold Price October 03 2024: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை.. சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கும் நிலை..

இந்திய பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களுக்கான நிலவரம்

இந்திய பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களாக எந்தவித பெரிய ஏற்றமும் இறக்கமும் இன்றி நீடித்து வந்த நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி பங்குச்சந்தை உயரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அக்டோபர் 1 ஆம் தேதியும் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, சென்செக்ஸ் 33.49 புள்ளிகள் சரிந்து 84,266.29 ஆகவும், நிஃப்டி 13.49 புள்ளிகள் சரிந்து 25,796 ஆகவும் இருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி பங்குச்சந்தைக்கு விடுமுறை அளித்திருந்ததால் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. விடுமுறைக்கு பின்பு இன்று பங்குச்சந்தை தொடங்கிய நிலையில், கடும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
Exit mobile version