5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Share Market : சரிவுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

Sensex | இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை நேற்று (அக்டோபர் 3) கடும் சரிவை சந்தித்தது. அதாவது சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்து 83.150 ஆகவும், நிஃப்டி 50 தோறாயமாக 230 புள்ளிகள் வரை குறைந்து 25,550 ஆகவும் வர்த்தகம் நடைபெற்றது. மத்திய கிழக்கில் நிலவும் பிரச்னையே இந்த கடும் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

Share Market : சரிவுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 04 Oct 2024 11:14 AM

ஈரான் – இஸ்ரேல் போர் எதிரொலியாக நேற்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் சுமார் 400 புள்ளிகள் வரை இறங்கியிருந்த சென்செக்ஸ் தற்போது சுமார் 130 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 82,631 புள்ளிகளில் வர்த்தகமாகி வருவகிறது. நேற்று ஒரே நாளின் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்த நிலையில், இன்றைய நிலை முதலீட்டாளர்கள் மத்தியில் சற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : FD Interest Rate : 2 முதல் 5 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்த ஈரான் – இஸ்ரேல் போர்

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதலே ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் மிக கடுமையான தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி பயங்கர தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேல் நிலை குலைந்த நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை விரிவடைய செய்துள்ளது. ஈரானின் இந்த செயலால் கடும் கோபம் கொண்டுள்ள இஸ்ரேல், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான் தனது விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. மேலும், இந்தியர்கள் யாரும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும், லெபனானுக்கு ஆதரவாக ரஷ்யாவும் களமிறங்கியுள்ள நிலையில், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

ஒரே நாளில் சரிந்த இந்திய பங்குச்சந்தை

இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை நேற்று (அக்டோபர் 3) கடும் சரிவை சந்தித்தது. அதாவது சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்து 83.150 ஆகவும், நிஃப்டி 50 தோறாயமாக 230 புள்ளிகள் வரை குறைந்து 25,550 ஆகவும் வர்த்தகம் நடைபெற்றது. மத்திய கிழக்கில் நிலவும் பிரச்னையே இந்த கடும் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே நிலவும் இந்த போர் பதற்றத்தின் காரணமாக இந்திய பங்குச்சந்தை மட்டுமன்றி உலகலாவிய பங்குச்சந்தையும் கடும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. நேற்று சரிவை சந்தித்த பங்குச்சந்தை இன்று சற்று உயர்வை கண்டுள்ளது. வர்த்தக தொடக்கத்தில் சுமார் 400 புள்ளிகள் வரை இறங்கியிருந்த சென்செக்ஸ் தற்போது சுமார் 130 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 82,631 புள்ளிகளில் வர்த்தகமாகி வருவகிறது.

இதையும் படிங்க : Mark Zuckerberg : 200 மில்லியன் டாலர் சொத்து.. உலகின் 4வது பணக்காரராக உருவெடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்!

ஒரே நாளில் ரூ.11 லட்சம் கோடி நஷ்டத்தை சந்தித்த முதலீட்டாளர்கள்

ஈரான் – இஸ்ரேல் போர் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டார்ளர்கள் சுமார் ரூ.11 லட்சம் கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மும்பை பங்குச்சந்தையின் முக்கிய பங்குகளாக கருதப்படும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிசி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நேற்றும் கடும் சரிவை சந்தித்துள்ளன.

இதையும் படிங்க : PPF Rules Changed : பிபிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்.. இன்று முதல் அமலுக்கு வருகிறது.. என்ன என்ன மாற்றங்கள் தெரியுமா?

இந்த நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,769 புள்ளிகள் சரிந்து 82,497 புள்ளிகளாக இருந்தது. இதேபோல நிஃப்டி 529 புள்ளிகள் சரிந்து 25,266 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. இவ்வாறு நிறுவனங்களின் பங்குகள் நேற்றைய தினத்தில் மட்டும் கடும் சரிவை சந்தித்த நிலையில், முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.11 லட்சம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News