Share Market : சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. டாடா பங்குகள் 2% உயர்வு! - Tamil News | Share Market started with drop on 11 October 2024 today | TV9 Tamil

Share Market : சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. டாடா பங்குகள் 2% உயர்வு!

Sensex and Nifty | இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வந்தது. அதாவது இந்திய பங்குச்சந்தை ஒரே வாரத்தில் 4,000 புள்ளிகள் சரிவை கண்டது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.16 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

Share Market : சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. டாடா பங்குகள் 2% உயர்வு!

மாதிரி புகைப்படம் (Photo Credit : Michael M. Santiago/Getty Images)

Updated On: 

11 Oct 2024 10:50 AM

கடந்த சில நாட்களாகவே கடும் ஏற்றம் இறக்கத்தை சந்தித்து வரும் இந்திய பங்குச்சந்தை இன்று (அக்டோபர் 11) சரிவுடன் தொடங்கியது. ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வந்தது. இந்த தொடர் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கடந்த 3 தினங்களாக இந்திய பங்குச்சந்தை உயர்வை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Gold Price October 11 2024: சவரனுக்கு ரூ.560 உயர்வு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ!

போரால் பாதித்த இந்திய பங்குச்சந்தை

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதலே ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் மிக கடுமையான தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, இஸ்ரேலை நிலைகுலைய செய்தது. ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை விரிவடைய செய்துள்ளது.

இதையும் படீங்க : UPI : UPI 123 Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனை வரம்பை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. எவ்வளவு தெரியுமா?

ஈரானின் இந்த செயலால் கடும் கோபம் கொண்டுள்ள இஸ்ரேல், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. இதனை தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்த ராணுவத்தை திரட்டிய இஸ்ரேல், இரான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இவ்வாறு அங்கு நிலமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இந்த போர் ஈரான் – இஸ்ரேலுக்கு மட்டுமன்றி அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் இது உலக பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இதையும் படிங்க : Gold Vs FD : தங்கம் Vs நிலையான வைப்புநிதி.. இரண்டில் எது சிறந்தது?.. முழு விவரம் இதோ!

சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வந்தது. அதாவது இந்திய பங்குச்சந்தை ஒரே வாரத்தில் 4,000 புள்ளிகள் சரிவை கண்டது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.16 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் கவலையடைந்தனர். இதனை தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 3 தினங்களாக இந்திய பங்குச்சந்தை உயர்வை சந்தித்து வருகிறது. ஆனால் இன்று பங்குச்சந்தை மீண்டு சரிவுடன் தொடங்கியுள்ளது. அதன்படி, காலை 10 மணி நிலவரத்தின்படி, இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 65.89 புள்ளிகள் குறைந்து 81,545.52 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல, நிஃப்டி 1.35 புள்ளிகள் குறைந்து 24,997.10 புள்ளிகளாக வர்த்தகம் செய்யபப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : Crude Oil : 7 நாட்களில் 13% விலை உயர்ந்த கச்சா எண்ணெய்.. தற்போதைய நிலவரம் என்ன?

நேற்றைய பங்குச்சந்தை நிலவரம்

நேற்று (அக்டோபர் 10) வர்த்த தொடகத்திலேயே பங்குச்சந்தை உயர்வை சந்தித்தது. அதன்படி, இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 110.95 புள்ளிகள் உயர்ந்து 81,578.05 புள்ளிகளாகவும், நிஃப்டி 19.80 புள்ளிகள் உயர்ந்து 20,001.75 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்றது. இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா உயிரிழந்த நிலையில், அவரது பங்குகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக முதலீட்டாளர்கள் டாடா பங்குகளை வாங்கும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறிய நிலையில், இன்று டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் 2% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version