Share Market : தொடர் சரிவுக்கு பிறகு உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம்! - Tamil News | Share market started with rise today November 6 2024 | TV9 Tamil

Share Market : தொடர் சரிவுக்கு பிறகு உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம்!

Sensex and Nifty | நேற்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்த நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. மொத்தமாக இந்திய பங்குச்சந்தையில் ஐடி துறைகளின் பங்குகள் சுமார் 3% உயர்வை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share Market : தொடர் சரிவுக்கு பிறகு உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம்!

மாதிரி புகைப்படம்

Published: 

06 Nov 2024 11:31 AM

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நாளில் ரூ.9,000 கோடி, ரூ.7,000 கோடி என முதலீட்டாளர்கள் கடும் நஷடத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய (நவம்பர் 5) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கிய நிலையில், இன்று (நவம்பர் 6) பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தையின் நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : FD Interest Rate : 5 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 5 வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

மத்திய கிழக்கு பிரச்னை எதிரொலி

மத்திய கிழக்கு பிரச்னையால் இந்திய பங்குச்சந்தை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நிலவி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீது இஸ்ரேல் மிக கடுமையான வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, இஸ்ரேலை நிலைகுலைய செய்தது ஈரான். ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையேயான போரை மேலும் வலுவடைய செய்துள்ளது.

இதையும் படிங்க : வரி செலுத்துவோருக்கு ஹேப்பி நியூஸ்.. வட்டி தள்ளுபடிக்கு ஒரு வாய்ப்பு.. விவரம்!

இந்திய பங்குச்சந்தை பாதிப்பு

ஈரானின் தாக்குதலால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தியது. அதன்படி, காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். சின்வாரின் கொலை ஹமாஸ் அமைப்பினரை ஆத்திரமடைய செய்தது. இதன் காரணமாக, இரண்டு நாடுகளும் மீண்டும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை பல சவால்களை சந்தித்து வருகிறது. இந்திய பங்குச்சந்தை மட்டுமன்றி உலக நாடுகளின் பங்குச்சந்தைகளும் மத்திய கிழக்கு பிரச்னையால் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

இதையும் படிங்க : FD Scheme : 2 ஆண்டுகளுக்கான FD.. 8% வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

நேற்றைய பங்குச்சந்தை நிலவரம்

அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக நேற்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, நேற்று வர்த்தக தொடக்கத்தில் NSE நிஃப்டி 50 321.20 புள்ளிகள் சரிந்து 23,983.15 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல BSE சென்செக்ஸ் 941.88 புள்ளிகள் சரிந்து 78,782 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : SIP – யில் ரூ.1கோடி கிடைக்க வேண்டுமா? மாதம் இவ்வளவு சேமித்தால் போதும்!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

நேற்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கிய நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. அதன்படி இன்று காலை 10.30 மணி நிலவரப்படி, BSE சென்செக்ஸ் 251.87 புள்ளிகள் உயர்ந்து 79,728.50 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல, NSE நிஃப்டி 74.20 புள்ளிகள் உயர்ந்து 24.287.50 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. ஒட்டுமொத்த பங்குச்சந்தை நிலவரப்படி, ஐடி துறைகள் 3% உயர்வை கண்டுள்ளன.

இதையும் படிங்க : PPF : ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.82 லட்சம் வருமானம் பெறலாம்.. இந்த PPF திட்டம் குறித்து கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

நேற்று அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு உலக மத்திய வங்கிகளிடமிருந்து வரவிருக்கும் பொருளாதார முடிவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியது. ஆனால் இன்று பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தையை பொறுப்பான நபராக வளர்க்க எளிய டிப்ஸ்!
மன்னிப்பு கேட்கக்கூடாத 10 நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா?
கல்லீரல் பிரச்சனையா? இந்த அறிகுறிகளை கவனிங்க!
தேங்காயில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..