Provident Fund : ஆன்லைனில் பிஎஃப் பணத்தை க்ளெய்ம் செய்வது எப்படி.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!

EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பணிக்காலம் முழுவதும் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்றால், பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

Provident Fund : ஆன்லைனில் பிஎஃப் பணத்தை க்ளெய்ம் செய்வது எப்படி.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Aug 2024 12:59 PM

ஊழியர் வருங்கால வைப்புநிதி : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பணிக்காலம் முழுவதும் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்றால், பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான ஊழியர்கள் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office Scheme : மாதம் ரூ.20,500 வரை வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

எந்த எந்த தேவைக்காக பிஎஃப் பணத்தை எடுக்கலாம்

ஊழியர் வருங்கால வைப்புநிதியில் இருந்து, பயனர்கள் தங்களின் திருமணம், மருத்துவம், வீடு கட்டுதல், வீட்டு கடன் உள்ளிட்ட தேவைகளுக்கான பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இந்நிலையில் ஊழியர் வருங்கால வைப்புநிதியில் இருந்து ஆன்லைனில் பணத்தை க்ளெய்ம் செய்வது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் பணத்தை ஆன்லைனில் க்ளெய்ம் செய்வது எப்படி?

  1. பிஎஃப் பணத்தை ஆன்லைனில் க்ளெய்ம் செய்வதற்கு முதலில் https://www.epfindia.gov.in/site_en/index.php  என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் உங்கள் பாஸ்வேர்டு மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
  3. பிறகு உங்கள் வங்கி கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை பிழை இல்லாமல் நிரப்ப வேண்டும்.
  4. விவரங்களை நிரப்பிய பிறகு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்பதை டிக் செய்யவும்.
  5. பிறகு Online Service என்ற லிங்கை ஓபன் செய்து உரிமைக் கோரல் படிவம் 31 என்ற ஆப்ஷனை பயன்படுத்தி Proceed for online claim என்பதை கிளிக் செய்யவும்.
  6. இவ்வாறு செய்வதன் மூலம், உங்களது படிவம் ஆன்லைன் மூலம் உரிமையாளர்களிடம் சென்றடையும்.
  7. நீங்கள் பிஎஃப் தொகையை திரும்ப பெறுவதற்கு விண்ணப்பித்த ஒரு சில நாட்கள் கழித்து உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துவிடும்.

இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD.. 9.5% வரை வட்டியை வாரி வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள்.. முழு விவரம் இதோ!

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம்  உங்களால் எளிதாக ஆன்லைன் மூலம் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்  என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!