Sivakasi : தீபாவளி பட்டாசு விற்பனை.. ரூ.6,000 கோடிக்கு விற்பனை செய்து அசத்திய சிவகாசி ஆலைகள்!

Crackers Sale | சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பட்டாசு வெடிப்பதால், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்பனை களைகட்டும். பண்டிகைக்கு ஒரு மாத காலத்திற்கு முன்பே பட்டாசு விற்பனை தொடங்கிவிடும்.

Sivakasi : தீபாவளி பட்டாசு விற்பனை.. ரூ.6,000 கோடிக்கு விற்பனை செய்து அசத்திய சிவகாசி ஆலைகள்!

கோப்பு புகைப்படம்

Published: 

01 Nov 2024 11:40 AM

நாடுமுழுவதும் நேற்று (அக்டோபர் 31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தீபாவளிக்கு, சிவகாசி பட்டாசு ஆலைகள் மூலம் சுமார் ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டதாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிவகாசியில் இயங்கி வரும் 1,150 பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் இணைந்து பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவகாசி ஆலைகளின் பட்டாசு விற்பனை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Gold Price November 1, 2024: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, கோயிலுக்கு சென்று, உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி என தீபாவளி பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடினர். தீபாவளி பண்டிகையில் புத்தாடை, இனிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பட்டாசுக்கும் முக்கியத்துவம்  அளிக்கப்படும். சொல்லப்போனால் தீபாவளி என்றாலே பட்டாசு தான் பலருக்கு நினைவுக்கு வரும். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பட்டாசு வெடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : Air Pollution : தீபாவளி எதிரொலி.. சென்னையில் 3 இடங்களில் மோசமான காற்றின் தரம்!

சிறப்பாக நடைபெற்ற பட்டாசு விற்பனை

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பட்டாசு வெடிப்பதால், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்பனை களைகட்டும். பண்டிகைக்கு ஒரு மாத காலத்திற்கு முன்பே பட்டாசு விற்பனை தொடங்கிவிடும். பட்டாசு விற்பனை மட்டுமன்றி, பொதுமக்களும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பட்டாசுக்களை வெடிக்க தொடங்கி விடுவர். இந்த அளவிற்கு தீபாவளி பண்டிகையில் பட்டாசு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான தீபாவளி வசுலை தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : Special Train : தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கு குட் நியூஸ்.. அரசு அதிரடி அறிவிப்பு!

ரூ.6,000 கோடிக்கு விற்பனையான பட்டாசுக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசி பட்டாசு ஆலைகள் மூலம் சுமார் ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டதாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிவகாசியில் உள்ள 1,150 பட்டாசு ஆலைகளில் சுமார் 4 லட்சம் பணியாளர்கள் இணைந்து தீபாவளிக்காக பட்டாசு தயாரித்ததாகவும், அந்த பட்டாசுகள் தான் தற்போது இந்த லாபத்தை கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Gas Cylinder Price : அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?

இந்த ஆண்டு 30 சதவீதம் பட்டாசு உற்பத்தி குறைவு

இது குறித்து தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளதாவது, பட்டாசு தயாரிப்பில் முக்கிய பொருளாக உள்ள பேரியம் நைட்ரேட் மீது உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதுமட்டுமன்றி, சரவெடி பட்டாசு தயாரிப்புகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்தது. இதன் காரணமாக நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவகாசி பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வழக்கத்தை விட 30 சதவீத பட்டாசு உற்பத்தி குறைந்தது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டில் நடந்த பட்டாசு டாஸ்க்… வைரலாகும் வீடியோ

70 சதவீத உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கும் சிவகாசி

இந்தியா முழுவதற்கும் பட்டாசு வழங்குவதில் சிவகாசி முதன்மை பங்கு வகிக்கிறது. அதாவது, இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 70 சதவீதம் சிவகாசியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், தீபாவளிக்காக ரூ.6,000 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!