5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Flipkart Utsav Sale : வந்தாச்சு பிளிப்கார்ட் உட்சவ் சேல்.. ஐபோன் முதல் மோட்டோ வரை.. ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!

Mobile Discount | ந்த அதிரடி சேல் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள நிலையில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்களை வரை மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பிளிப்கார்டின் இந்த சேலில் ஐபோன் ஐபோன்கள் முதல் மோட்டோ வரை, பல ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Flipkart Utsav Sale : வந்தாச்சு பிளிப்கார்ட் உட்சவ் சேல்.. ஐபோன் முதல் மோட்டோ வரை.. ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி
vinalin
Vinalin Sweety | Published: 11 Oct 2024 18:14 PM

சமீபத்தில் பிள்ப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் சேல் நடந்து முடிந்த நிலையில், அதற்கு அடுத்தப்டியாக பிக் ஷாப்பிங் உட்சவ் சேலை (Big Shopping Utsav Sale) பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த அதிரடி சேல் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள நிலையில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்களை வரை மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பிளிப்கார்டின் இந்த சேலில் ஐபோன்கள் முதல் மோட்டோ வரை, பல ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உட்சவ் சேலை முன்னிட்டு பிளிக்பார்ட் வழங்கும் சலுகைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Budget Smartphones : அக்டோபர் மாதம் விற்பனையில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 ஸ்மார்ட்போன்கள்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த உட்சவ் சேலில் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் ஸ்டோர்களில் ஆப்பிள் ஐபோன் 15 ரூ.69,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்டில் வெறும் ரூ.57,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஆப்பிள் ஐபோன் 15-க்கு பிளிப்கார்டில் சுமார் ரூ.11,901 தள்ளுபடியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Android Tricks : ஆண்ட்ராய்டு பயனர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 ட்ரிக்ஸ்.. என்ன என்ன தெரியுமா?

ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் மற்றும் 15 ப்ரோ

இதேபோல ஆப்பிள் 15 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.79,900-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்டில் வெறும் ரூ.65,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஐபோன் 15 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ஆப்பிள் ரூ.13,901 வரை தள்ளுபடி வழங்குகிறது. மேலும் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,15,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்டில் வெறும் ரூ.1,04,490-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Jio Recharge : அசத்தல் அம்சங்களுடன் 2 புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ!

குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் மற்ற ஸ்மார்ட்போன்கள்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த உட்சவ் சேலில் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மோட்டோரோலாவின் மோட்டோ G85 ஸ்மார்ட்போன் ரூ.22,200-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்டில் வெறும் ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ரூ.15,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட CMF Phone 1, பிளிப்கார்டில் வெறும் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் ரூ.1,000 தள்ளுபடியாக வழங்குகிறது.

இதையும் படிங்க : WhatsApp Feature : இனி வாட்ஸ்அப்பிலும் “Chat Theme” செட் செய்யலாம்.. விரைவில் அறிமுகம்!

அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யப்படும் Poco X6 Pro மற்றும் Moto Edge 50 Neo

ரூ.24,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட 256 ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட Poco X6 Pro ஸ்மார்ட்போன், பிளிப்கார்டில் வெறும் ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் ரூ.4,000 தள்ளுபடி வழங்குகிறது. இதேபோல ரூ.23,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட Moto Edge 50 Neo ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் ரூ.1,000 தள்ளுபடி வழங்குகிறது.

இதையும் படிங்க : Google Chat : இனி கூகுள் சாட்டில் வீடியோ மெசேஜ் அனுப்பலாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த கூகுள்!

 

Latest News