மீண்டும் எஃப்.டி வட்டியை உயர்த்திய எஸ்.பி.ஐ: புதிய வட்டி தெரியுமா? | State Bank of India fixed deposit interest rates hiked Tamil news - Tamil TV9

மீண்டும் எஃப்.டி வட்டியை உயர்த்திய எஸ்.பி.ஐ: புதிய வட்டி தெரியுமா?

Published: 

20 Jun 2024 20:47 PM

SBI FD Rates Hikes: 1 வருடத்தில் இருந்து 2 வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.80% வட்டி விகிதமும், 2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கு குறைவாக உள்ள டெபாசிட்களுக்கு 7% வட்டி விகிதமும் தொடர்ந்து வழங்கப்படும். மேலும், மூன்று வருடங்களில் இருந்து 5 வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் உள்நாட்டு டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதம் 6.75% ஆகவும், ஐந்து ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் கணக்குகளின் வட்டி விகிதம் 6.50% ஆகவும் இருக்கும்.

மீண்டும் எஃப்.டி வட்டியை உயர்த்திய எஸ்.பி.ஐ: புதிய வட்டி தெரியுமா?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட்

Follow Us On

எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு: ரூ.7.49 லட்சம் கோடி சந்தை மூலதனம் கொண்ட நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஜூன் 15ஆம் தேதி ரூ.3 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள், 180 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட காலங்களுக்கு பொருந்தும். இதனால், முதலீட்டாளர்கள் தற்போது 25 அடிப்படைப் புள்ளிகள் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். சில்லறை முதலீட்டாளர்கள் தற்போது ரூ.3 கோடி வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். முன்னதாக, சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்தது. அப்போது, மொத்த ஃபிக்ஸட் டெபாசிட் வரம்பை ரூ 2 கோடியில் இருந்து ரூ 3 கோடியாக உயர்த்தியது.

எஸ்.பி.ஐ புதிய வட்டி விகிதங்கள்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, 7 முதல் 45 நாள்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 3.50% வட்டி விகிதத்தை வங்கி தொடர்ந்து வழங்கும். அதே நேரத்தில் 46 முதல் 179 நாள்களில் முதிர்ச்சியடைபவர்களுக்கு 5.50% வட்டி விகிதத்தை வழங்கும். அதேபோல், 180 நாள்கள் முதல் 210 நாள்கள் வரையிலான காலக்கெடு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எஸ்.பி.ஐ வங்கி (SBI) வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் 6% லிருந்து 6.25% ஆக உயர்த்தியுள்ளது. மேலும், 211 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு, வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் 6.25% லிருந்து 6.50% ஆக உயர்த்தியது.
1 வருடத்தில் இருந்து 2 வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.80% வட்டி விகிதமும், 2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கு குறைவாக உள்ள டெபாசிட்களுக்கு 7% வட்டி விகிதமும் தொடர்ந்து வழங்கப்படும். மேலும், மூன்று வருடங்களில் இருந்து 5 வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் உள்நாட்டு டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதம் 6.75% ஆகவும், ஐந்து ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் கணக்குகளின் வட்டி விகிதம் 6.50% ஆகவும் இருக்கும்.

சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1111, 1777, மற்றும் 2222 நாட்கள் ஆகிய மூன்று குறிப்பிட்ட தவணைகளுக்கு சில்லறை டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை விட 10 அடிப்படை புள்ளிகள் குறைவான விகிதம் வழங்குகிறது. மேலும், எஸ்.பி.ஐ தற்போது ஒரு வருடத்திற்கான கார்டு விகிதத்தை விட 30 பிபிஎஸ் அதிக வட்டி விகிதத்தையும், சர்வோத்தம் (அழைக்க முடியாத) உள்நாட்டு சில்லறை டெபாசிட்கள் ரூ. 1 கோடி முதல் அதற்கும் குறைவாக உள்ள இரண்டு ஆண்டுகளுக்கான 40 பிபிஎஸ் அதிக வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
தொடர்ந்து, மூத்த குடிமக்களுக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான தவணைகளில் 50 bps கூடுதல் வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ வழங்கும். மேலும், எஸ்.பி.ஐ வீகேர் (SBI We-care) டெபாசிட் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 50 bps உட்பட, 6.50% என்ற நிலையான விகிதத்துடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்களுக்கு 7.50% வருவாய் விகிதம் இருக்கும்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஜூன் 15 அன்று ரூ. 3 கோடிக்கும் குறைவான சில்லறை கால டெபாசிட்களில் திருத்தம் செய்வதாக அறிவித்தது. யூனியன் வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான தவணைக்காலங்களில் 3.50% முதல் 6.50% வரை வட்டி விகிதங்களைச் செலுத்தும், மேலும் பொது மக்களுக்கு 399 நாட்கள் வரையிலான தவணைகளில் அதிகபட்சமாக 7.25% வருமானம் கிடைக்கும்.

இதையும் படிங்க : ஈஸியா வருமான வரி கட்டலாம்.. இந்த 4 விஷயத்தை மனசில வச்சிக்கோங்க!

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version