SBI : எஸ்.பி.ஐ வழங்கும் 5 சிறப்பு FD திட்டங்கள்.. வட்டி எவ்வளவு தெரியுமா?.. முழு விவரம் இதோ!

Investment Scheme | எஸ்பிஐ வங்கி, அம்ரித் கலாஷ், எஸ்பிஐ விகேர், எஸ்பிஐ கிரீன் டெபாசிட், எஸ்பிஐ சர்வோட்டம் உள்ளிட்ட பல சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த சிறப்பு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

SBI : எஸ்.பி.ஐ வழங்கும் 5 சிறப்பு FD திட்டங்கள்.. வட்டி எவ்வளவு தெரியுமா?.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

25 Oct 2024 11:10 AM

இந்தியாவில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியும் பல நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமன்றி எஸ்பிஐ வங்கி, அம்ரித் கலாஷ், எஸ்பிஐ விகேர், எஸ்பிஐ கிரீன் டெபாசிட், எஸ்பிஐ சர்வோட்டம் உள்ளிட்ட பல சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த சிறப்பு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Bank of Baroda : FD-களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா.. எவ்வளவு தெரியுமா?

எஸ்பிஐ வழங்கிம் 5 சிறப்பு FD திட்டங்கள்

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில் எஸ்பிஐ வழங்கும் 5 சிறப்பு நிலையான வைப்புநிதி திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : Bob Utsav : அதிக வட்டியுடன் கூடிய புதிய FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் பரோடா.. சிறப்பு அம்சங்கள் என்ன?

எஸ்பிஐ அம்ரித் கலாஷ்

சாதாரன நிலையான வைப்புநிதி திட்டங்களை விட எஸ்பிஐ-ன் இந்த அம்ரித் கலாஷ் திட்டத்தில் அதிக வட்டி வழங்கப்படுகிறது. 400 நாட்கள் கால அளவீடு கொண்ட இந்த திட்டத்திற்கு 7.10% வட்டி வழங்கப்படுகிறது. இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.60% வரை வட்டி வழங்கப்படுகிறது. எனவே மூத்த குடிமக்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய மார்ச் 2025 கடைசி தேதியாகும்.

இதையும் படிங்க : DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்.. முழு விவரம் இதோ!

எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி

444 நாட்கள் கால அளவீடு கொண்ட புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட எஸ்பிஐ-ன் இந்த அம்ரித் விருஷ்டி நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.25% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதே கால அளவீடு கொண்ட திட்டத்திற்கு மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஜூலை 2024 முதல் மார்ச் 2025 வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : SBI Amrit Vrishti : எஸ்.பி.ஐ வழங்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம்.. வட்டி மட்டும் 7.75%.. அம்ரித் விருஷ்டி குறித்த முழு விவரம் இதோ!

எஸ்பிஐ விகேர்

எஸ்பிஐ-ன் இந்த சிறப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இது 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை வழங்குகிறது. அதன்படி இந்த திட்டத்திற்கு 7.50% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய நவம்பர் 30 2024 கடைசி தேதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Amrit Kalash Scheme : அதிக வட்டி வழங்கும் SBI-ன் அம்ரித் கலாஷ் திட்டம்.. முதலீடு செய்ய காலக்கெடு நீட்டிப்பு!

எஸ்பிஐ கிரீம் ருப்பீ டெர்ம் டெபாசிட்

எஸ்பிஐ வழங்கும் இந்த கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் திட்டத்தில் 1111 நாட்கள் மற்றும் 1777 நாட்கள் கொண்ட திட்டங்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 7.15% வட்டி வழங்கப்படுகிறது.  2222 நாட்கள் கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.40% வட்டி வழங்குகிறது. இதேபோல 1111 நாட்கள் மற்றும் 1777 நாட்கள் கொண்ட திட்டங்களுக்கு பொது குடிமக்களுக்கு 6.65% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 222 நாட்கள் கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.40% வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Indian Billionaire : $1.1 ட்ரில்லியனை தாண்டிய இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு.. மாஸ் காட்டும் தொழிலதிபர்கள்!

எஸ்பிஐ சர்வோட்டம்

2 ஆண்டுகளுக்கான இந்த திட்டத்தில் 7.4% வரை வட்டி வழங்கப்படுகிறது. இதுவே ஒரு ஆண்டுக்கான திட்டம் என்றால் 7.10% வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு கூடிதலாக 50 bps கிடைக்கும். அதன்படி 2 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அவர்களுக்கு 7.9% வட்டி வழங்கப்படும்.

இதையும் படிங்க : Aadhaar Renewal : இன்னும் 2 மாதங்கள் மட்டும்தான் அவகாசம்.. அதுக்குள்ள ஆதார் கார்டுல இத பண்ணலனா சிக்கல்!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!