5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Stock Market 05 August: பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சி… ரூ.10 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. உங்க ஸ்டாக்கின் நிலை என்ன?

வார முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என அச்சம் நிலவி வரும் நிலையில், உலக சந்தையில் அது எதிரொலித்துள்ளது. குறிப்பாக, இந்தியா பங்குச்சந்தையான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.10.24 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.  

Stock Market 05 August: பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சி… ரூ.10 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. உங்க ஸ்டாக்கின் நிலை என்ன?
பங்குச்சந்தை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 05 Aug 2024 10:41 AM

பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சி: வார முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்துள்ள நிலையில், இன்று கடும் சரிவை கண்டது. அதன்படி, 1,563 புள்ளிகள் சரிந்து 79,419 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. அதேபோல, நிஃப்டி 479 புள்ளிகள் சரிந்து 24,238 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. இதனால் பல்வேறு நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.  குறிப்பாக, டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், எம்&எம், எஸ்பிஐ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் டைட்டன் போன்ற நிறுவனத்தின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அமெரிக்கப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என அச்சம் நிலவி வரும் நிலையில், உலக சந்தையில் அது எதிரொலித்துள்ளது. குறிப்பாக, இந்தியா பங்குச்சந்தையான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.10.24 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.

லாபத்துடன் வர்த்தகமாகும் பங்குகள்:

டாபர் இந்தியா, மரிகோ, எச்யூஎல், சன் பார்மா, யுபிஎல், நெஸ்டல், டாடா கான்ஸ், கோல்கேட், பிரிட்டானியா, ஐடிசி, கோத்ரெஜ் கன்சியூமர், ஏசியன் பெயிண்ட்ஸ், மகாநகர் கேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தமாகி வருகிறது.

Also Read: உயர்ந்தது தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

நஷ்டத்துடன் வர்த்தகமாகும் பங்குகள்:

பாரத் ஃபோர்ஜ், மதர்சான், எல்ஐசி, ஹவுசிங் ஃபின், பேங்க் ஆஃப் பரோடா, பிஎச்இஎல், என்ஏஎல்கோ, டாடா மோட்டார்ஸ், பிர்லாசாப்ட், பாரத் எலக், SAIL, பந்தன் வங்கி, எம்எம் பைனான்சியல், ஆர்பிஎல் வங்கி, ஓஎன்ஜிசி, ஹின்டல்கோ, எல்&டி பைனான்சிஸ், பிஎன்பி, வேதாந்தா, கனரா வங்கி, வால்டாஸ், டாடா பவர், வொடாபோன் ஐடியா, டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, எம்.எம், இன்போசிஸ், டிஎல்எஃப், ஏபிபி இந்தியா, மாருதி சுசிகி, சிட்டி யூனியன் வங்கி, ஜின்டா ஸ்டீல், டாடா காம், லார்சன், ரிலையன்ஸ், கோல் இந்தியா, டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் நஷ்டத்தில் வர்த்தமாகி வருகிறது.

Also Read:

ரூபாய் மதிப்பு:


இன்று இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்த நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து 83.80 ஆக உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு பல ஆண்டுகளுக்கு சரிந்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்யும் வழக்கும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால், சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் தங்க மீதான சுங்க வரி குறைந்ததன் காரணமாக தங்கம் விலையும் குறைந்தது. எனவே, தங்கத்தை வாங்க மக்கள் இயல்பை விட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல, மத்திய பட்ஜெட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ஐடி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் சற்று பெரு மூச்சு விட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Latest News