5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Share Market : கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

Sensex and Nifty | இன்றைய பங்குச்சந்தை நிலவரத்தின்படி, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 தலா 1 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையில், பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யபப்டும், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதாவது, இந்த நிறுவனங்கள் தலா 2 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share Market : கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!
மாதிரி புகைப்படும்
vinalin
Vinalin Sweety | Updated On: 13 Dec 2024 16:44 PM

இந்திய பங்குச்சந்தை கடந்த பல நாட்களாகவே கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், டிசம்பர் 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, இன்றைய பங்குச்சந்தை நிலவரத்தின்படி, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 தலா 1 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையில், பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யபப்டும், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதாவது, இந்த நிறுவனங்கள் தலா 2 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Recurring Deposit : மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.1 லட்சம் பெறலாம்.. SBI-ன் அசத்தல் திட்டம்!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன?

இன்றைய பங்குச்சந்தையின் நிலவரத்தின் படி, சென்செக்ஸ் சுமார்ப் 1,200 புள்ளிகள் சரிவை சந்தித்து 80,082.82 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல, நிஃப்டி 50 சுமார் 370 புள்ளிகள் சரிவை சந்தித்து 24,180.80 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது. அதாவது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே சராசரியாக 1.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. இதேபோல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்டி வங்கி மற்றும் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் 1 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : PF Settlement Claim : பிஎஃப் செட்டில்மென்ட் க்ளெய்ம் செய்வதில் புதிய மாற்றம்.. இந்த 4 பேருக்கு விலக்கு!

2 சதவீதம் சரிவை சந்தித்த பங்குச்சந்தை குறியீடுகள்

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யபப்டும் ஹெச்டிஎஃப்டி வங்கி மற்றும் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் தலா ஒரு சதவீதம் சரிவை சந்தித்துள்ள நிலையில், BSE மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குச்சந்தை குறியீடுகள் தலா 2 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. அதாவது, BSE-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார், 458 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அது அபப்டியே ரூ.451 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் சுமார் ரூ.7 லட்சம் கோடியை இழக்கும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office : போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா.. வீட்டில் இருந்தபடியே சுலபமாக செய்யலாம்!

இந்திய பங்குச்சந்தை கடுமையாக சரிந்தது ஏன்?

இந்திய பங்குச்சந்தை மிக கடுமையாக சரிந்ததற்கு முக்கிய காரணமாக அமெரிக்கா உள்ளது. அதாவது அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்த நிலையில், இன்று இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய பங்குச்சந்தையின் இந்த கடும் வீழிச்சி முதலீட்டாளர்களை மிக கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது மட்டுமன்றி, அமெரிக்காவின் Fed கூட்டமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அதாவது, வரும் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் Fed கூட்டம் நடைபெற உள்ள நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் அமெரிக்காவின் பக்கம் திரும்பியுள்ளது. இதுவும் இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News