Crude Oil Price : அதிரடியாக விலை உயர்ந்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலையும் உயருமா?.. நிபுணர்கள் கூறுவது என்ன?

Fuel Price | கடந்த சில நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு எடுக்கலாம் என்று இக்ரா தரக் குறியீட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து இக்ரா தரக் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கிரிஷ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Crude Oil Price : அதிரடியாக விலை உயர்ந்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலையும் உயருமா?.. நிபுணர்கள் கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

06 Oct 2024 16:34 PM

கடந்த சில நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலும் விலை குறையும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கடும் போர் நிலவி வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், கச்சா எண்ணெயின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன, கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர்வில் எதிரொலிக்குமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Share Market : ஒரே வாரத்தில் 4,000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. சுமார் ரூ.16 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. காரணம் என்ன?

பெட்ரோல், டீசல் விலை குறையலாம் என கூறிய இக்ரா தரக் நிறுவனம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு எடுக்கலாம் என்று இக்ரா தரக் குறியீட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து இக்ரா தரக் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கிரிஷ் எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது, கடைசியாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டபோது கடந்த மார்ச் மாதத்தில் சர்வதே சந்தையில் ஒரு பேரில் கச்சா எண்ணையின் விலை 83 முதல் 84 டாலராக இருந்தது. இந்த நிலையில் செப்டம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை சராசரியாக பேரலுக்கு 75 டாலராக குறைந்துள்ளது.

இதையும் படிங்க : FD Interest Rate : 2 முதல் 5 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

இதனால் இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் விநியோக நிறுவனங்களில் மோட்டார் வாகன எரிபொருள் சில்லரை விற்பனையில் லாபம் பரப்பு மெதுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து கச்சா எண்ணெய் விலை மாற்றமின்றி நிலையாக இருக்கும் பட்சத்தில், பெட்ரோல் டீசலில் சில்ரை விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

ஒரே வாரத்தில் விலை உயர்ந்த கச்சா எண்ணெய்

இந்த நிலையில் தான் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விழாக்காலம் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நடுவே கடும் போர் நிலவி வருவதால் நிலமை தலைகீழாக மாறியுள்ளது. அதாவது கடந்த வாரம் விலை குறைந்த கச்சா எண்ணெய், தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயரவ வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?

தகவலின் படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கச்ச எண்ணெய் விலை சுமார் 5% வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே வாரத்தில் கச்சா எண்ணெய் விலை இத்தகைய எழுச்சியை பெற்றுள்ள நிலையில், தற்போதை சூழலில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வாய்ப்பு இல்லை என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!