SSY Vs PPF : சுகன்யா சம்ரித்தி யோஜனா Vs பொது வருங்கால வைப்பு நிதி.. எது சிறந்த வட்டி வழங்குகிறது?
Interest Rate | அரசு சார்பில் சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி ஆகிய இரண்டு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த இரண்டு திட்டங்களில் அதிக வட்டி வழங்க கூடிய திட்டம் எது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் மிக முக்கிய பங்கு வகிப்பதால், அதனை பாதுகாப்பதற்காக அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது என தெரியாமல் மக்கள் குழம்புகின்றனர். மக்களின் குழப்பத்தை போக்கும் வகையில், அரசின் இரண்டு சேமிப்பு திட்டங்களை ஒப்பிட்டு அந்த இரண்டிலும் உள்ள நன்மைகள் மற்றும் பலன்கள் குறித்து இங்கே விரிவாக கொடுத்துள்ளோம். இதன் மூலம் தங்களுக்கு சரியான திட்டம் எது என்பதை அவர்களால் எளிதாக அறிந்துக்கொள்ள முடியும். தற்போது, சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி ஆகிய இரண்டு திட்டங்களில் எந்த திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : மூன்று ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்.. எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி: எதில் பெஸ்ட் ரிட்டன்?
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
அரசு செயல்படுத்தி வரும் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி கடந்த ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு முதல் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. பொதுவாக, சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறை மாற்றி அமைக்கும் நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே உள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரத்தின் படி பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது பெண் குழந்தைகளுக்கான ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், பெற்றோர்கள் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். பெண் குழந்தைகளின் குழந்தை பருவத்தில் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், அவர்கள் வளர்ந்ததும் அவர்களுக்கான கல்வி மற்றும் திருமண செலவை மேற்கொள்ள இந்த சேமிப்பு போதுமானதாக இருக்கும். எனவே பெரும்பாலான பொதுமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்த திட்டத்திற்கு தற்போது 8.2 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : SBI FD : எஸ்பிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கான FD.. 5 ஆண்டுகளுக்கு ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
இரண்டு திட்டங்களின் எது சிறந்தது?
பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகிய இரண்டு திட்டங்களுமே மிகவும் பாதுகாப்பான திட்டங்களாக கருதப்படுகிறது. காரணம், இந்த திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தையும் பெற முடியும். ஆனால், பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகிய இரண்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில், சுகன்யா சம்ரித்தி யோஜனா ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாக கட்ருதப்படுகிறது. காரணம் இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஆனால், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு வெறும் 7.1 சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெயரில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். எனவே, அது அனைவருக்கும் சிறந்த திட்டமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Senior Citizen FD : எஸ்பிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கான அம்ரித் விருஷ்டி திட்டம்.. எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.