Ration Shop : தீபாவளியை முன்னிட்டு சிறப்பு சலுகை.. ரேஷன் கடைகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு! - Tamil News | Tamil Nadu government announced important announcement on ration shops ahead of Diwali | TV9 Tamil

Ration Shop : தீபாவளியை முன்னிட்டு சிறப்பு சலுகை.. ரேஷன் கடைகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!

Important Announcement | தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் சிறப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடும் வகையில், தமிழக அரசின் அனைத்து துறைகள் சார்பிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Ration Shop : தீபாவளியை முன்னிட்டு சிறப்பு சலுகை.. ரேஷன் கடைகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!

கோப்பு புகைப்படம் (Abhishek Chinnappa/Getty Images)

Updated On: 

25 Oct 2024 13:57 PM

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகைக்காக தயாராகி வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமன்றி, அரசும் பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : 9.50% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

தமிழக அரசு சார்பில் முன்னேற்பாடுகள்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் சிறப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடும் வகையில், தமிழக அரசின் அனைத்து துறைகள் சார்பிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கூட்டுறவுத் துறை மூலம் தமிழகம் முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சுமார் 24,610 முழு நேர ரேஷன் கடைகள் மற்றும் பகுதி நேரமாக செயல்படும் 10,164 ரேஷன் கடைகள் என தமிழகத்தில் உள்ள மொத்தம் 34,774 ரேஷன் கடைகளில் குடிமைப் பொருட்களை பெற்று பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : Airtel : ரீச்சார்ஜ் திட்டங்களில் விபத்து காப்பீடு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்.. எவ்வளவு தெரியுமா?

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பு

அதன்படி, வரும் அக்டோபர் 27 ஆம் தேதி, அதாவது ஞாயிற்று கிழமை அனைத்து முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தான் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஞாயிற்று கிழமை அன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக வேறு ஒரு நாள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி வரும் நவம்பர் 11 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்து அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : SBI-ன் 444 நாட்களுக்கான FD Vs ICICI-ன் 15 மாதங்களுக்கான FD.. அதிக லாபம் வழங்கும் திட்டம் எது?

பொதுமக்களுக்கு சிறப்பு சலுகை

வழக்கமாக மாத இறுதி நாட்களில் ரேஷன் கடைகள் செயல்படாது. இந்த நிலையில், இந்த மாத இறுதியில், அதாவது அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அன்றைய தினமும் ரேஷன் கடைகள் இயங்காது. இதனை ஈடுகட்டும் விதமாக வரும் அக்டோபர் 27 ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த தினத்தில் ரேஷன் அட்டை தாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

முக்கிய பங்கு வகிக்கும் ரேஷன் அட்டை மற்றும் ரேஷன் கடைகள்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டம் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க : Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

அதன்படி குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை ரேஷன் கடைக்கு செல்லும்போதும் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கடை முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

பருவ வயது குழந்தைகளிடம் பெற்றோர் பேசவேண்டிய முக்கிய விஷயங்கள்!
குடும்ப உறவுகளுக்கு இடையே அன்பு அதிகரிக்க டிப்ஸ்!
வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?
தண்ணீர் குடிக்க வேண்டிய 5 முக்கியமான தருணங்கள்..!