Diwali Bonus : தமிழக அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ்?.. வெளியான முக்கிய தகவல்! - Tamil News | Tamil Nadu government employees can expect double bonus for Diwali 2024 says source | TV9 Tamil

Diwali Bonus : தமிழக அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ்?.. வெளியான முக்கிய தகவல்!

Published: 

03 Oct 2024 21:07 PM

Tamil Nadu | ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் போனஸை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Diwali Bonus : தமிழக அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ்?.. வெளியான முக்கிய தகவல்!

மாதிரி புகைப்படம்

Follow Us On

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இனிப்புகள், ஆடைகள் மற்றும் பட்டாசுக்களின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் நிலையில், இந்த ஆண்டுக்காக தீபாவளி போனஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு இரட்டை போனஸ் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போனஸ் குறித்து வெளியான தகவல் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : FD Interest Rate : 2 முதல் 5 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

தீபாவளி போனஸ் குறித்து வெளியான தகவல்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் போனஸை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

தீவிர ஆலோசனை மேற்கொண்டு வரும் தமிழக அரசு

2024 ஆம் ஆண்டு தீபாவளிக்கு போக்குவரத்து ஊழியர்கள் உட்பட அனைத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. பொதுவாக ஒரு அரசு ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் இருந்து 20% பணம் போனசாக வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டுக்கான தீபாவளி போனசாக 12-14% வரை போனஸ் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசு இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?

மார்ச் மாதம் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அப்போது, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படியில் இருந்து சுமார் 46% முதல் 50% வரை உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். அவரின் அறிவிப்பின்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : Mark Zuckerberg : 200 மில்லியன் டாலர் சொத்து.. உலகின் 4வது பணக்காரராக உருவெடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2வது அகவிலைப்படி உயர்வு எப்போது

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும் நிலையில், 2வது அகவிலைப்படி உயர்வை எதிர்ப்பார்த்து ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான 2வது அகவிலைப்படி உயர்வு தற்போது அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி தீபாவளி போனஸ் உடன் சேர்த்து 2வது அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : PPF Rules Changed : பிபிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்.. இன்று முதல் அமலுக்கு வருகிறது.. என்ன என்ன மாற்றங்கள் தெரியுமா?

தமிழக அரசு ஊழியர்கள் தீபாவளி போனஸை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலையில் அகவிலைப்படி உயர்வுடன் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பும் சேர்த்து இரட்டை போனஸாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version