5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ration Shop : இனி வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை.. எல்லாமே ரேஷன் கடையில் வரப்போகுது.. அரசின் அதிரடி திட்டம்!

Bank Service | இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.

Ration Shop : இனி வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை.. எல்லாமே ரேஷன் கடையில் வரப்போகுது.. அரசின் அதிரடி திட்டம்!
கோப்பு புகைப்படம் (Abhishek Chinnappa/Getty Images)
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 01 Oct 2024 10:59 AM

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் புதிய திட்டம் ஒன்றை அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரேஷன் கடைகளில் வங்கி சேவையை வழங்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன, வங்கி சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்ன என பல கேள்விகள் எழுந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Gold Price October 01 2024: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? செக் பண்ணுங்க!

அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்கும் ரேஷன் கடைகள்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டம் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன. அதன்படி குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை ரேஷன் கடைக்கு செல்லும்போதும் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கடை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், ரேஷன் கார்டு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : October Changes : கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை.. அக்டோபர் மாதம் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!

ரேஷன் கடைகளில் வங்கி செவை

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வங்கி சேவையை வழங்கும் புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அரசு வழங்கும் முதியவர்களுக்கான ஓய்வூதியம், பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் நலதிட்ட உதவிகளை ரேஷன் கடைகள் மூலமே பெற்றுக்கொள்ளும்படி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. தற்போது அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பயனர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய திட்டம் குறித்து அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : அஞ்சலக FD.. ரூ.25,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. தெரிஞ்சிக்கோங்க!

பொதுமக்களின் சிரமத்தை குறைக்க அரசு நடவடிக்கை

என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இன்றளவும் கூட அத்தியாவசிய வசதிகள் உள்ளன. குறிப்பாக மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாமல் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை வங்கிகளுக்கோ அல்லது ஏடிஎம் மையங்களுக்கோ சென்று பணமாக எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களில் அது கடும் சவாலாக மாறிவிடுகிறது.

இதையும் படிங்க : Insurance Scheme : 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசு அதிரடி!

காரணம் வங்கிகளுக்கோ அல்லது ஏடிஎம் மையங்களுக்கோ செல்ல வேண்டும் என்றால் அவர்கள் நீண்ட தூறம் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. முதியோர் உதவி தொகை வாங்கும் முதியவர்கள் பலர் ஆதரவின்றி தனியாக வசிக்கின்றனர். வயது மூப்பின் காரணமாக அவர்களால் நெடுந்தூரம் பயணித்து பணத்தை எடுக்க முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Latest News